தொழிலாளர்களின் நலன் கருதி பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும், முதல்-அமைச்சருக்கு டீமா சங்கம் கோரிக்கை
பின்னலாடை தொழில் நலிவடைந்து வரும் நிலையில் தொழிலாளர்களின் நலன் கருதி பஸ்கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சருக்கு டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தின்(டீமா) தலைவர் முத்துரத்தினம் தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகளால் திருப்பூர் பின்னலாடை தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அறிவிப்புகளால் பாதிப்படைந்துள்ளனர். ஏற்றுமதி வர்த்தகத்தில் அண்டை நாடுகளின் கடுமையான போட்டி, உள்நாட்டில் விலை உயர்வு காரணத்தால் கூலி உயர்வு, வங்கிகளின் அதிக வட்டி விகிதம், மூலப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் அதிக அளவு நஷ்டம் அடைந்து வருகிறது.
இதனால் ஏற்றுமதியாளர்கள் சிலர் நஷ்டத்தை சந்தித்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு 40 முதல் 60 சதவீதம் வரை பஸ் கட்டணத்தை உயர்த்தி இருப்பது தொழிலாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூருக்கு வெளியூர்களில் இருந்து வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இந்த கட்டண உயர்வால் அவர்கள் தொழில் நிறுவனங்களிடம் சம்பளத்தை உயர்த்தி கேட்கின்றனர்.
இதனால் ஆர்டர்களில் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு சலுகைகளை அந்த மாநில அரசு வழங்கி வருகிறது. ஆனால் தமிழக அரசு எந்த சலுகையும் அளிக்கவில்லை. அண்டை மாநிலங்களுக்கு சென்றால் தான் பிழைப்பை நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
இது மட்டுமின்றி திருப்பூரில் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கான வரியும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே தொழிலாளர்களின் நலன் கருதி பஸ் கட்டண உயர்வை தள்ளுபடி செய்து அல்லது குறைந்த சதவீத கட்டணத்தை உயர்த்தி மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அனைத்து அமைப்புகளையும் இணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story