பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோவையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கோவை,
தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும் அதை திரும்ப பெறக் கோரியும் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு, தி.மு.க. மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
தி.மு.க, சொத்து பாதுகாப்பு குழு துணைத்தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, தி.மு.க. இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி, டி.ஆர்.சண்முகசுந்தரம், ஆறுமுகபாண்டி, கிஸ்கால் கண் ணப்பன், வக்கீல் கணேஷ்குமார், வெங்கடேஷ், நா.முருகவேல். காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார், புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன், எம்.என்.கந்தசாமி, மகேஷ்குமார், கணபதி சிவகுமார், ஏ.ஆர்.சின்னையன், காந்தகுமார், சாய்சாதிக், விஜயகுமார், இருகூர் சுப்பிரமணியன், ஆர்.பி.முருகேசன், செந்தில்குமார், ம.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் குகன்மில் செந்தில், இளை ஞர் அணி மாநில செயலாளர் வே.ஈஸ்வரன், அர்ஜுன்ராஜ், சேதுபதி, மு,கிருஷ்ணசாமி மற்றும் சுந்தரம், ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு கட்சி), பெரியசாமி, கார்த்திகேயன், வடிவேல் (கொ.ம.தே.க.) சுசி கலையரசன்(விடுதலை சிறுத்தைகள்) உள்பட கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கட்சி கொடிகளை ஏந்தி வந்திருந்தனர். வாபஸ் வாங்கு, வாபஸ் வாங்கு பஸ் கட்டண உயர்வை வாபஸ் வாங்கு, நசுக்காதே, நசுக்காதே ஏழை மக்களை நசுக்காதே என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர்.
முன்னதாக தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட் டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை கைது செய்து அழைத்து செல்வதற்காக 5 போலீஸ் வேன்கள் அங்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி அளித்தனர். அதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்றது.

Related Tags :
Next Story