பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 Jan 2018 5:29 AM IST (Updated: 28 Jan 2018 5:29 AM IST)
t-max-icont-min-icon

தேனியில், பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளதை கண்டித்து தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி தேனி பங்களா மேட்டில் தி.மு.க. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசினார்.

மாநில விவசாய தொழி லாளர் அணி தலைவர் மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறக்கோரியும் பேசினர். இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரன் மற்றும் திராவிடர் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, முஸ்லிம் லீக், சமத்துவ மக்கள் கழகம், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை கண் டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங் கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, தி.மு.க. இளைஞரணி முன்னாள் துணை அமைப் பாளர் நாராயணபாண்டி தலைமையில், ஒரு அட்டையில் பஸ் டிக்கெட்டுகளை ஒட்டி ஊர்வலமாக கொண்டு வந் தனர். பின்னர், அந்த டிக் கெட்டுகளுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மற்றும் தோழமை கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

Next Story