உளுந்தூர்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டையில் சாலையின் நடுவே தடுப்புக்கட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டையில் கடந்த சில மாதங்களாக சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் போக்குவரத்து பணிமனையில் இருந்து கடைவீதி வரை சாலையின் நடுவே தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு செல்லக்கூடிய சாலையை மறித்து தடுப்புக்கட்டை அமைக்கும் பணி நேற்று நடைபெற்றது. இதை பார்த்த தீயணைப்பு துறையினர், அங்கிருந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், தீயணைப்பு நிலையம் முன்பு தடுப்புக்கட்டை அமைத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறினர். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் கூறாமல் தடுப்புக்கட்டை அமைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் சந்தோஷ், மாவட்ட செயலாளர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர் கோபி ஆகியோர் தலைமையிலான கட்சியினர் தீயணைப்பு நிலையம் முன்பு சாலையின் நடுவே தடுப்புக்கட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உளுந்தூர்பேட்டை- சென்னை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த பொதுமக்களும் திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் உடனே இங்கு வருவதாகவும், அவர் வந்த பிறகு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும், அதுவரை மறியலை கைவிடுங்கள் என்று கூறினர். இதனை ஏற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மறியலை கைவிட்டு, சாலையோரமாக நின்றனர்.
இதற்கிடையில் அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கட்சியினர், தீயணைப்பு நிலையம் முன்பு தடுப்புக்கட்டை அமைக்கும் பணியை கைவிட வேண்டும், இல்லையெனில் கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.
உடனே நெடுஞ்சாலைத்துறையினர் தீயணைப்பு நிலையம் முன்பு தடுப்புக் கட்டைகள் அமைக்கும் பணியை கைவிட்டு அங்கிருந்து சென்றனர். இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story