சதாப்தி ரெயிலில் இணைக்கப்பட்ட ‘அனுபுதி’ சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2,145
சதாப்தி ரெயிலில் இணைக்கப்பட்ட ‘அனுபுதி’ சொகுசு பெட்டியில் சென்னை செல்ல கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145. அந்த பெட்டியில் செல்ல இன்று அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன.
கோவை,
கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும் சதாப்தி விரைவு ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நின்று சென்னையை இரவு 10.15 மணிக்கு சென்றடையும். அதே ரெயில் மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு கோவையை வந்தடையும்.
அந்த ரெயிலில் 7 குளிர் சாதன பெட்டிகள், ஒரு கூடுதல் வசதி (எக்சிகியூட்டிவ்) குளிர்சாதன பெட்டி மற்றும் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் உள்ளன.இந்த நிலையில் கூடுதலாக ‘அனுபுதி‘ என்ற சொகுசு பெட்டி ஒன்று நேற்று முன்தினம் முதல் சதாப்தி விரைவு ரெயிலில் இணைக்கப்பட்டுள்ளது.
அந்த பெட்டியில் இருக்கைக்கு பின்புறம் தொடு திரையுடன் கூடிய எல்.சி.டி. டெலிவிஷன் உள்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. ஒவ்வொரு ரெயில் நிலையத்தின் பெயர், அடுத்து வரப்போகும் இடம், ரெயிலின் வேகம் ஆகியவையும் அதில் அறிவிக்கப்படுகிறது.
இது குறித்து சமூக ஆர்வலர் கோகிலன் என்பவர் கூறிய தாவது:-
மற்ற ரெயில்களை ஒப்பிடும் போது அனுபுதி பெட்டியில் கட்டணம் மிக அதிகம் என்றாலும் பல்வேறு சொகுசான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தாலும் போக போக இந்த சொகுசு பெட்டியில் கூட்டம் படிப்படியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பெட்டிக்கு சென்னையில் இருந்து கோவை வருவோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. ஆனால் கோவையில் இருந்து சென்னை செல்வதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.
மேலும் இந்த ரெயிலை பிற் பகல் 3.25-க்கு பதில் 4 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் வகையில் செய்தால் சாதாரண நாட்களிலும் அந்த பெட்டியில் கூட்டம் அதிகரிக்கும். சென்னையில் இருந்து கோவைக்கு காலையில் வந்து மாலையில் சென்னை திரும்புபவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர். அவர்கள் மாலையில் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் தான் செல்கிறார்கள். எனவே அனுபுதி இணைக்கப்பட்ட சதாப்தி விரைவு ரெயிலை மாலை 4 மணிக்கு புறப்படுமாறு நேரத்தை மாற்றி அமைத்தால் அதில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்.
அனுபுதி சொகுசு பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூ.2 ஆயிரத்து 145 ஆகும். தட்கல் ஒதுக்கீட்டில் பயணம் செய்ய கட்டணம் ரூ.2 ஆயிரத்து 670 ஆகும். அனுபுதி ரெயில் பெட்டியில் முதல் நாள் கூட்டம் இல்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமையான இன்று அந்த பெட்டியில் இடம் கிடையாது. அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன. இன்று காத்திருப்போர் எண்ணிக்கை 8 ஆகவும் தட்கல் காத்திருப்போர் எண்ணிக்கை 4 ஆகவும் உள்ளது. நாளை(திங்கட்கிழமை) 50 சதவீத இருக்கைகள் நிரம்பி விட்டன. கோவையில் இருந்து சென்னை செல்வதற்கு விமானத்தில் ஒரு வாரத்துக்கு முன்பு முன்பதிவு செய்தால் கட்டணம் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை இருக்கும். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்தால் விமான கட்டணம் ரூ.5 ஆயிரம் வரை இருக்கும்.
விமான கட்டணத்துக்கு இணையாக அனுபுதி பெட்டியில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் அதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story