மருத்துவ பணியாளருக்கு கிடைத்த கவுரவம்


மருத்துவ பணியாளருக்கு கிடைத்த கவுரவம்
x
தினத்தந்தி 28 Jan 2018 1:17 PM IST (Updated: 28 Jan 2018 1:17 PM IST)
t-max-icont-min-icon

கீதா வர்மா, இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தை சேர்ந்தவர்.

கீதா வர்மா, இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டி மாவட்டத்தை சேர்ந்தவர். அங்கு சாகர்டெக்ரா என்ற இடத்தில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக வேலை பார்த்து வருகிறார். சுற்றுப்புற பகுதியிலுள்ள கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். தடுப்பூசி போடாமல் விடுபட்ட குழந்தைகளை தேடி கண்டுபிடித்தும் தன் பணியை இடைவிடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார். மலைக்கிராமங்கள், பனி பிரதேச பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளின் இருப்பிடத்திற்கு சென்றடைய மோட்டார் சைக்கிளையும் பயன்படுத்து கிறார்.

கடந்த ஆண்டு மலைப்பாங்கான பகுதியில் உள்ள கரடுமுரடான சாலைகளில் கீதா வர்மா தடுப்பூசி பெட்டியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றது இணையதளங்களில் வைரலாக பரவியது. அவருடைய அர்ப்பணிப்பு சேவையை பாராட்டும் விதமாக உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டுக்கான காலண்டரின் முதல் பக்கத்தில் கீதா வர்மாவின் புகைப்படத்தை இடம்பெற செய்துள்ளது. அவருடைய சேவை மனப்பான்மை குறித்து கடிதம் அனுப்பியும் கவுரவித்து இருக்கிறது. பெண் சுகாதார பணியாளர் ஒருவருக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும்.

Next Story