விழிப்புணர்வை விதைக்கும் விருந்து பரிமாற்றம்
திருமணம் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவுகள் பரிமாறப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
திருமணம் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி உணவுகள் பரிமாறப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. அவற்றை கட்டுப் படுத்துவதற்கான மாற்று வழி முறைகளை ஒருசில பகுதிகளில் கடைப்பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள்.
கேரள மாநிலத்தில் விஷேச நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் ‘கிரீன் புரோட்டாகால்’ எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் தட்டுக்கள் மட்டுமின்றி பேப்பர் கப்புகளின் புழக்கத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கர்நாடக மாநிலத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தி இருக்கிறது. விருந்துகளில் பரிமாறப்படும் தட்டுகள், கிண்ணங்கள், கரண்டிகள், டம்ளர்கள் அனைத்தையும் சில்வர் பாத்திரங் களாக வாடகைக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். சர்ஜாபூர், ஒயிட் பீல்டு பகுதிகளில் நடைபெறும் விஷேச நிகழ்ச்சிகளில் இந்த தொண்டு நிறுவனத்தினரின் சில்வர் பாத்திரங்கள் இடம்பிடிக்கின்றன.
இதுபற்றி அந்த நிறுவனத்தின் நிர்வாகி லட்சுமி கூறுகையில், ‘‘நகர்பகுதிகளில் விருந்து நிகழ்ச்சி களின்போது தேங்கும் குப்பைகளை குறைப்பதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானித்தோம். அதன் ஒரு பகுதியாக சில்வர் பாத்திரங்களை விருந்து நிகழ்ச்சிகளில் பயன்படுத்துமாறு வலியுறுத்தி கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் மட்டுமின்றி பேப்பர் கப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் பேப்பர் கப்புகள் தயாரிப்புக்காக அதிக அளவில் மரங்கள் அழிக்கப்படுகின்றன. பிளாஸ்டிக்குக்கு மாற்றாக கருதி பேப்பர் கப்புகளின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதில் அர்த்தமில்லை. வெளி இடங்களுக்கு செல்லும்போது சில்வர் டம்ளர்களை எடுத்து செல்ல பழக வேண்டும். எங்களின் முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நிறைய பேர் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். அதனால் குப்பைகள் குறைய தொடங்கி இருக்கிறது’’ என்கிறார்.
2003-ம் ஆண்டு முதல் சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். அதற்கு ஒத்துழைப்பு கிடைக்க தொடங்கியதும் சில்வர் பாத்திரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வந்திருக்கிறார்கள். இப்போது 10 ஆயிரம் சில்வர் தட்டுகள், கிண்ணங்கள், டம்ளர்கள், கரண்டிகள் இவர்களின் கையிருப்பில் இருக்கின்றன.
இவர்களை போலவே அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களும் ஒன்று சேர்ந்து சில்வர் பாத்திரங்களை வாங்கி அங்கு நடக்கும் விஷேசங்களுக்கு பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். வெளியிடங்களுக்கு வாடகைக்கும் கொடுக்கிறார்கள். கே.ஆர்.புரத்தை சேர்ந்த ஒரு அமைப்பினர், ‘‘நாங்கள் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவோம். கடந்த ஆண்டு பிரசாதம் வழங்கியபோது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தோம். அதன் பிறகு நிரந்தரமாக பயன்படுத்தும் நோக்கத்தில் சில்வர் பாத்திரங்களை வாங்கினோம். பிறந்தநாள், திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கு எங்களிடம் பாத்திரங்களை வாங்கி செல்கிறார்கள்’’ என்கிறார்கள்.

Related Tags :
Next Story