கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு


கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு
x
தினத்தந்தி 29 Jan 2018 3:45 AM IST (Updated: 29 Jan 2018 2:43 AM IST)
t-max-icont-min-icon

கீழகுளத்தூரில் கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த வாலிபர் மீது வழக்கு

திருமானூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழகுளத்தூர் ஊராட்சியில் கடந்த 26-ந் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் இருந்துள்ளனர். அப்போது, அதே ஊரை சேர்ந்த புண்ணியம் மகன் பாரதிராஜா (வயது 20) என்பவர் அங்கு வந்து ஊருக்கு எதுவும் நல்லது செய்யவில்லை. மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எதற்காக இந்த கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது எனக்கூறி தகராறு செய்துள்ளார். இதுகுறித்து ஊராட்சி செயலாளர் சங்கர் கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கிராமசபை கூட்டத்தை நடக்க விடாமல் தடுத்த பாரதிராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story