பஸ் கட்டண குறைப்பால் ஒருநாளைக்கு ரூ.4 கோடி நஷ்டம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
பஸ் கட்டண குறைப்பால் ஒரு நாளைக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
பள்ளிபாளையம்,
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கலியனூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு கணினி பதிவுகளை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் மக்கள் சேவையை கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறது. லாபத்தில் இயங்க வேண்டிய அவசியம் இல்லை. அரசு போக்குவரத்துக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு, ஊழல் என எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டை கூறுகின்றன. பஸ் கட்டண உயர்வுக்கு முன்பு நாள் ஒன்றுக்கு ரூ.9 கோடி நஷ்டம் ஏற்பட்டது. தற்போது பஸ் கட்டண குறைப்பால் ஒரு நாளைக்கு ரூ.4 கோடி நஷ்டம் ஏற்படுகிறது.
பஸ் கட்டண உயர்வு மாணவர்களை பாதிக்கவில்லை. சலுகைகள் தொடர்கின்றன. தனியாருக்கு சாதகமாக பஸ் கட்டணத்தை உயர்த்தவில்லை. அரசு பஸ்கள் 20 ஆயிரத்து 984 உள்ளன. ஆனால் தனியார் பஸ்கள் 4 ஆயிரம்தான் உள்ளன. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை கிடையாது. கோட்ட அளவில் போக்குவரத்துக்கழக நிர்வாகத்தை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் தேவையில்லை. உதிரிபாகங்கள் தட்டுப்பாடு எதுவும் இல்லை. தட்டுப்பாடு இருப்பதாக கூறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story