பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து 5 கிராம விவசாயிகள் சாலைமறியல்
முத்துப்பேட்டை அருகே பாசனத்திற்கு தேக்கி வைத்து இருந்த தண்ணீரை திறந்துவிட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து 5 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
முத்துப்பேட்டை,
முத்துப்பேட்டை அருகே உள்ள பாண்டி, குன்னலூர், எக்கல், கடம்பவிளாகம், வேப்பஞ்சேரி ஆகிய 5 கிராம விவசாயிகள் மரைக்காகோரையாறு தண்ணீரை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர். சமீபத்தில் காவிரியில் தண்ணீர் வரத்து இல்லாமல் ஆறுகளில் தண்ணீர் வராததால் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருக தொடங்கின. இந்தநிலையில் கருகும் பயிர்களை காப்பாற்ற இப்பகுதி விவசாயிகள் போராட்டங்கள் நடத்தியதையடுத்து மரைக்காகோரையாறில் தண்ணீர் வரத்து பெற்று பாண்டி அணையில் தண்ணீரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேக்கி வைத்து இருந்தனர். தற்போது கருக தொடங்கிய பயிரை காப்பாற்ற இப்பகுதி விவசாயிகள் இந்த தண்ணீரை பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரின் தூண்டுதலின் பேரில் தேக்கி வைத்து இருந்த தண்ணீரை வேறு ஒரு பகுதிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆற்றில் தேக்கி வைத்து இருந்த தண்ணீர் முழுவதும் வடிந்து வறண்டு விட்டது. இதனைக்கண்ட இப்பகுதி விவசாயிகள் அதிருப்தி அடைந்து நேற்று காலை பாண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தமிழ்நாடு விவசாய கூட்டு இயக்க மாநில செயலாளர் சந்திரசேகரன், பாசன கமிட்டி தலைவர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகி வீரமணி, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அன்பழகன், காங்கிரஸ் நிர்வாகி இளவரசன், விவசாய பிரதிநிதி பவர்ராஜ் ஆகியோர் தலைமையில், 5 கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் முத்துப்பேட்டை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story