அரசு பஸ் மோதி வடமாநில முதியவர் சாவு
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர்.
சாத்தூர்,
மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு பஸ்சில் தமிழகத்திற்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரி சென்றுவிட்டு, பின்னர் அங்கிருந்து ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். சாத்தூர் சின்ன ஓடைப்பட்டி அருகே ஓட்டலில் சாப்பிடுவதற்காக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு சுற்றுலா பயணிகள் அதில் இருந்து கீழே இறங்கினர். பஸ்சில் சென்ற பாண்டுரங்கு(வயது 65) என்பவர் பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக கோவில்பட்டி நோக்கி சென்ற அரசு பஸ், பாண்டுரங்கு மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பாண்டுரங்கு இறந்துபோனார். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story