பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
பாகூர்,
பாகூர் அடுத்துள்ள சேலியமேடு கிராமத்தில் நெல் அறுவடை திருவிழா நடந்தது. விழாவில் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு நெல் அறுவடையை தொடங்கிவைத்தார்.
புதுச்சேரியில் உள்ள விவசாயிகளுக்கான சலுகைகளை காலதாமதம் இன்றி வழங்கிட அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் நமது மாநில விவசாயிகளுக்கு வறட்சி காலத்தில் மூன்று வகையில் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது.
தென் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஆனால், புதுச்சேரியை பொருத்தவரை இங்குள்ள விவசாயிகளுக்கு மாநில அரசு பாதுகாப்பை அளித்துள்ளது.
நமது மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்திட, ஒரு நாளைக்கு 50 ஆயிரம் லிட்டர் பால் வெளிமாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் பேசி, மானியத்துடன் கூடிய புல் வளர்ப்பு திட்டத்தின் மூலம் பசு மாடுகளுக்கு ஒரு நாளைக்கு தலா 10 கிலோ பசுந்தீவனம் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இயற்கை முறையில் காய்கறி உற்பத்தி செய்தால் அதிக லாபம் கிடைக்கும். புதுச்சேரியில் காய்கறி விவசாயம் குறைந்துள்ளது. வீடுகளில் காய்காறி தோட்டம் அமைக்க ஊக்குவிக்க வேண்டும். பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., படித்த விவசாய துறை அதிகாரிகள், அலுவலகத்தில் அமர்ந்து கோப்புகளை பார்த்து வருகின்றனர். அந்த அதிகாரிகள் அலுவலகத்தில் இருந்த வெளியில் வந்து விவசாயிகளை நேரடியாக சந்தித்து, நவீன உத்திகள் மூலம் விவசாயத்தை ஊக்கவிக்க வேண்டும்.
விழாவில் அரசு செயலர் அன்பரசு, வேளாண் துறை இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story