ஈரோட்டில் தீ விபத்து 6 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
ஈரோட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
ஈரோடு,
ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்னவலசு மாரியம்மன் கோவில் 4-வது வீதியில் 9 குடிசை வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. இந்த வீடுகளில் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருக்கிறார்கள். அவர்கள் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 8.15 மணிஅளவில் ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி குடிசை முழுவதும் பற்றி எரிந்தது. மேலும், அருகில் உள்ள குடிசை வீடுகளுக்கும் தீ மளமளவென பரவியது. இதனால் குடிசை வீடுகள் கொழுந்துவிட்டு எரிந்தன. தீ விபத்து ஏற்படும்போது வீடுகளில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் குடிசை வீடுகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும், அருகில் உள்ள குடிசைகளுக்கும் தீ பரவிக்கொண்டே இருந்தது.
இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினார்கள்.
சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் 6 குடிசை வீடுகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் 3 குடிசை வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் வீடுகளில் இருந்த பீரோ, கட்டில், துணிகள், சைக்கிள்கள், மொபட் ஆகியவை எரிந்து நாசமானது. மேலும், ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் போன்றவைகளும் தீயில் கருகியது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story