உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும், அமைச்சர் மணிகண்டன் பேச்சு
உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெறும் என அமைச்சர் மணிகண்டன் பேசினார்.
பரமக்குடி,
பரமக்குடி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் மிளகாய் அரவை ஆலை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. அதன் தொடக்க விழா கூட்டுறவு இணைப்பதிவாளர் முருகேசன் தலைமையில் நடந்தது. துணைப்பதிவாளர் தங்கப்பன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜமால் அனைவரையும் வரவேற்றுப்பேசினார். அமைச்சர் மணிகண்டன் மிளகாய் அரவை ஆலையை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்த எனக்கு வாய்ப்பு அளித்தார். அதை நானும் சிறப்பாக நடத்தி முடித்தேன். அந்த விழாவில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். 2 நாட்களிலேயே தண்ணீர் திறந்து விடப்பட்டது.
ராமநாதபுரத்தில் 57 கண்மாய்கள் நிரப்பப்பட்டுஉள்ளன. திருவாடானை பகுதிக்கும் தண்ணீர் போதிய அளவு சென்றுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீர் பிரச்சினையே வராது. ஜெயலலிதாவின் சாதனைகளை சொல்லி உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story