‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு, அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவு என்று ஈரோட்டில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு,
ஈரோடு அரசு தலைமை ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் கருவியை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இயக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:-
தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களின் கோப்புகள் பள்ளிக்கல்வித்துறையின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் இதுபற்றிய முடிவு செய்து, இன்னும் ஒரு வார காலத்தில் நல்ல முடிவு அறிவிக்கப்படும். மேலும், தமிழகத்தில் தற்போதைய ஆசிரிய காலிப்பணியிடங்கள் அடிப்படையில் நியமனங்கள் நடைபெறும்.
பல்வேறு தனியார் பள்ளிக்கூடங்களில் விடுமுறை நாட்களிலும் கூடுதல் நேரம் ஒதுக்கி மாணவ-மாணவிகளுக்கு கற்றுக்கொடுக்கப்படுவதாக தகவல்கள் வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மூலம் சோதனை செய்யப்படும்.
தமிழகத்தில் சுமார் 1 லட்சம் கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்களுக்கான சிறப்பு பயிற்சி பிப்ரவரி 20-ந் தேதிக்குள் தொடங்கப்படும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் அதை சந்திக்க மாணவ-மாணவிகளை தயார்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை முடிவாக இருக்கிறது.
ஆனாலும் இந்தியா முழுவதும் வருகிற மே மாதம் 6-ந்தேதி ‘நீட்’ தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் பங்கேற்க தயார் செய்து வருகிறோம். இதற்காக 412 மையங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஏற்கனவே 100 மையங்கள் தொடங்கப்பட்டு விட்டன. 312 மையங்கள் வருகிற பிப்ரவரி 4-ந் தேதிக்குள் தொடங்கப்படும். இதன் மூலம் 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இந்த மாத இறுதிக்குள் அனைவருக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு, பாடங்கள் அடங்கிய பென்டிரைவ் வழங்கப்படும். மேலும் மிகச்சிறந்த 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் முடிந்ததும் 20 நாட்கள் சென்னையில் 4 கல்லூரிகளில் மையம் அமைத்து இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவர்களுக்கு தங்கும் வசதி, உணவு இலவசமாக வழங்கப்படும்.
இந்திய அளவில் சிறந்த நிறுவனமான ‘ஸ்பீடு’ மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. தனியாக இந்த பயிற்சி பெறுவது என்றால் ஒரு மாணவன் அல்லது மாணவி தலா ரூ.1 லட்சம் செலவு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு 72 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கி ரூ.720 கோடியை மாணவ-மாணவிகளுக்கு மிச்சப்படுத்தி உள்ளது. தமிழக அரசு செய்து இருக்கும் இந்த ஏற்பாடுகளால், நீட் தேர்வு முடிவுகள் வரும்போது தமிழக மாணவர்கள் பெறும் வெற்றி எங்கள் செயல்பாடுகளை பறைசாற்றும். தமிழக அரசு எவ்வளவு சிறப்பாக பணியாற்றி உள்ளது என்பது தெரியும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்

Related Tags :
Next Story