நெய்வேலியில் தண்ணீர் தொட்டிக்குள் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் அடித்து கொலையா? போலீஸ் விசாரணை
நெய்வேலியில் தண்ணீர் தொட்டிக்குள் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் கொலை செய்து விட்டு வீசி சென்றனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே மேலக்குப்பத்தை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரகுமார்(வயது 21). இவர் கடந்த 21-ந்தேதி தனது வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே சென்று விட்டு வருவதாக கூறி சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி பார்த்தனர். இருப்பினும் அவர் எங்கே சென்றார், என்ன ஆனார் என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் உள்ள ஒரு தண்ணீர் தொட்டியின் உள்ளே உடல் அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை அங்கிருந்தவர்கள் பார்த்து, நெய்வேலி தெர்மல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்தவரின் உடலை மீட்டு விசாரித்தனர்.அதில், அங்கு பிணமாக கிடந்தது, மேலக்குப்பத்தை சேர்ந்த சுபாஷ்சந்திரகுமார் என்பது தெரியவந்தது. கடந்த 21-ந்தேதி மாயமான அவர், தண்ணீர் தொட்டியின் உள்ளே பிணமாக கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.தகவல் அறிந்த, அவரது குடும்பத்தினர் அங்கு விரைந்து வந்து, சுபாஷ் சந்திரகுமாரின் உடலை பார்த்து கதறி அழுதனர். தொடர்ந்து சுபாஷ்சந்திரகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷ்சந்திரகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தொட்டியில் வீசிவிட்டு சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Tags :
Next Story