91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து
புதுவை மாநிலத்தில் நேற்று 91 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதை முதல்– அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி,
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆண்டுதோறும் ஜனவரி 28–ந்தேதியும் மற்றும் மார்ச் 11–ந்தேதியும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுவையில் நேற்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது.
புதுவை குயவர்பாளையம் மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், இயக்குனர் ராமன், சுகாதார திட்ட இயக்குனர் காளிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக புதுச்சேரியில் 333, காரைக்காலில் 79, மாகியில் 18, ஏனாமில் 22 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. புதுவை பஸ் நிலையம், ரெயில்நிலையம், கடற்கரை சாலை, மணக்குள விநாயகர் கோவில், ஊசுட்டேரி, சுண்ணாம்பாறு படகு குழாம் மற்றும் புதுவை எல்லைப்பகுதிகளான காலாப்பட்டு, மதகடிப்பட்டு, கோரிமேடு, கன்னியகோவில், திருக்கனூர், குரும்பாபேட் பகுதிகளிலும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சொட்டு மருந்து வழங்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் மற்றும் தன்னார்வல நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். புதுவை மாநிலத்தில் நேற்று சுமார் 91 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. புதுவைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து புகட்டப்பட்டது.
புதுவையில் நேற்று சொட்டு மருந்து வழங்கப்படாமல் விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதார ஊழியர்கள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய்க்கிழமை) வீடுவீடாக சென்று சொட்டு மருந்து வழங்க உள்ளனர்.

Related Tags :
Next Story