தமிழர் பண்பாட்டுத் திருவிழா முதல்–மந்திரி கலந்து கொள்கிறார்
மராட்டிய தமிழர் நலக்கூட்டமைப்பு சார்பில் கிங்சர்க்கிளில் இன்று தமிழர் பண்பாட்டுத் திருவிழா நடக்கிறது. இதில், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொள்கிறார்.
மும்பை,
நிர்வாகக்குழு தலைவர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகிக்கிறார். இதில், சிறப்பு அழைப்பாளராக மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொள்கிறார்.
விழாவில் நடிகர்கள் மனோபாலா, பசுபதி, ரோபோ சங்கர், நடிகை சிருஷ்ட்டி டாங்கே, இயக்குனர் பிரபு சாலமன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவின் இசை கச்சேரி நடக்கிறது.விஜய் டி.வி. புகழ் கலக்க போவது யாரு தினேஷ், அன்னலட்சுமி ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சி, டான்ஸ் மாஸ்டர் சிவாஜி குழுவினரின் நடன நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
இயக்குனர் செல்வம் சுப்பையா வழங்கும் மும்பை பெருநகரம் பற்றிய ஆவணப்படம் திரையிடப்படுகிறது. விழாவில் சாதனையாளர்கள் பாராட்டி கவுரவிக்கப்படுகிறார்கள். மேலும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை மராட்டிய தமிழர் நலக்கூட்டமைப்பு அமைப்பாளர்கள் கருண், ராஜேந்திரன் சுவாமி, கராத்தே முருகன், அங்கப்பன், குமார், அனிதா டேவிட் மற்றும் தலைமை ஆலோசகர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story