‘என் பொறுமைக்கும் எல்லை உண்டு’ ஏக்நாத் கட்சே சொல்கிறார்


‘என் பொறுமைக்கும் எல்லை உண்டு’ ஏக்நாத் கட்சே சொல்கிறார்
x
தினத்தந்தி 29 Jan 2018 5:01 AM IST (Updated: 29 Jan 2018 5:01 AM IST)
t-max-icont-min-icon

என் பொறுமைக்கும் எல்லை உண்டு, கட்சியில் இருந்து விலக நான் விரும்பவில்லை என ஏக்நாத் கட்சே கூறியுள்ளார்.

மும்பை,

பா.ஜனதா கட்சியில் முக்கிய தலைவர்களுள் ஒருவர் ஏக்நாத் கட்சே. இவர் வருவாய் துறை மந்திரியாகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2016–ம் ஆண்டு இவர் மீது நில மோசடி, முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் தன் பதிவியை ராஜினாமா செய்தார்.

பின்னர் அவருக்கு எந்த முக்கிய பதவியும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஏக்நாத் கட்சே கூறியதாவது:–

நான் என் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது பொதுமக்களிடேயே என்மீது பரப்பப்பட்டிருக்கும் அனைத்து குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்கம் அளித்தேன். என்மீது குற்றம் இருந்தால் என்னை சிறையில் அடையுங்கள். ஆனால் உண்மை வெளிவரவேண்டும்.

கடந்த 20 மாதங்களாக நான் தொடர்ந்து பொறுப்புகளில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன். ஆனால் என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. 40 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டு கட்சியில் இருந்து விலக எனக்கு விருப்பம் இல்லை.

அனால் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்காக நான் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் போது நான் அந்த முடிவுக்கும் தள்ளப்படுகிறேன். என்னை கட்சியில் இருந்து வெளியேற்ற சிலர் தொடர்ந்து முயற்சிக்கும்போது நான் என்ன செய்வது. ஒழுக்க நடவடிக்கை எனக்கு மட்டும் தானா?

இவ்வாறு ஏக்நாத் கட்சே கூறினார்.


Next Story