தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
தனியார் நிறுவன அதிகாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 15 பவுன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச்சென்று விட்டனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த உள்ளகரம் எம்.ஜி.ஆர். நகர், யூனியன் காலனியை சேர்ந்தவர் உண்ணிகிருஷ்ணன்(வயது 50). தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இவருடைய சொந்த ஊர் கேரள மாநிலம் ஆகும்.
இவர், வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்று இருந்தார். நேற்று காலை சென்னைக்கு திரும்பி வந்தார். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் இருந்த பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் அனைத்தும் தரையில் வீசப்பட்டு கிடந்தது. பீரோவில் சோதனை செய்தபோது அதில் வைத்து இருந்த 15 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருப்பது தெரிந்தது.
உண்ணிகிருஷ்ணன் குடும்பத்துடன் கேரளா சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த நகை மற்றும் வெள்ளி பொருட்களை அள்ளிச்சென்று உள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Tags :
Next Story