கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன் சிக்கினார்
கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கல்யாண மன்னன் புருசோத்தமன் போலீசிடம் சிக்கினார்.
கோவை,
கோவை வெள்ளலூரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 57). இவர், தன்னை தொழில் அதிபர் என்றும், மனைவி இறந்துவிட்டதால் 2-வதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோவையில் உள்ள மெட்டிஒலி என்ற திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.
அந்த திருமண தகவல் மையத்தை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மோகனன் (65), அவருடைய மனைவி வனஜாகுமாரி (53) ஆகியோர் நடத்தி வந்தனர். அவர்கள் மையத்தில் மணமகனுக்காக பதிவு செய்து இருந்த குமுதவள்ளி (45) என்பவரிடம் புருசோத்தமன் குறித்து பெருமையாக கூறி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து குமுதவள்ளி, புருசோத்தமனை நேரில் சந்தித்தார். அவரிடம் தனது மனைவி இறந்துவிட்டதால் கல்லூரி படிக்கும் தனது மகளை பார்க்க ஆள்இல்லை. எனவே தான் மறுமணம் செய்ய இருப்பதாக புருசோத்தமன் கூறினார். இதை நம்பிய குமுதவள்ளி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் புருசோத்தமனை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த சில நாட்களில் புருசோத்தமன் தனது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி குமுதவள்ளியிடம் இருந்து ரூ.3 கோடி வாங்கிவிட்டு சென்றார். அதன் பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த குமுதவள்ளி, புருசோத்தமன் குறித்து விசாரித்தார்.
அப்போது, புருசோத்தமன் கோவையை சேர்ந்த சபீதா, உஷாராணி, சாந்தி, சுசீலா, சென்னை அண்ணாநகரை சேர்ந்த பேராசிரியை இந்திரா காந்தி, ஈரோட்டை சேர்ந்த சித்ரா உள்பட மொத்தம் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பலகோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது. இதற்கு புருசோத்தமனின் மகள் கீதாஞ்சலியும் உடந்தையாக இருந்துள்ளார்.
இதுதொடர்பாக கோவை மாநகர கிழக்கு பகுதி மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் தலைமறைவான புருசோத்தமனை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் புருசோத்தமன் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ய உடந்தையாக இருந்த திருமண தகவல் மைய நிர்வாகிகள் மோகனன், வனஜாகுமாரி ஆகியோரை சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
புருசோத்தமன் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவர், பொள்ளாச்சி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டையில் புருசோத்தமன் சிக்கினார்.
அவரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்யாண மன்னன் புருசோத்தமன் எத்தனை பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? மோசடி செய்த பணம் எவ்வளவு? அந்த பணத்தை எங்கு பதுக்கி வைத்துள்ளார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். புருசோத்தமன் மீது ஏற்கனவே மோசடி வழக்குகளும் உள்ளன. அதுகுறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Tags :
Next Story