8 பெண்களை ஏமாற்றி திருமணம்: மோசடி பணத்தில் சொத்துகள் வாங்கி குவித்த கல்யாண மன்னன்
கோவையில் 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண மன்னன், மோசடி செய்த பணத்தில் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை,
கோவையை அடுத்த வெள்ளலூரை சேர்ந்தவர் புருசோத்தமன் (வயது 57). இவர் தன்னை தொழில் அதிபர் என்றும், தனது மனைவி இறந்துவிட்டதால் 2-வதாக திருமணம் செய்ய இருப்பதாகவும் கூறி கோவையில் உள்ள மெட்டிஒலி என்ற திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார்.
அதே திருமண தகவல் மையத்தில், பணக்கார குடும்பத்தை சேர்ந்த குமுதவள்ளி (45) என்பவர் திருமணத்துக்காக பதிவு செய்தார். அவரிடம் அந்த திருமண தகவல் மையத்தை நடத்திய கோவையை சேர்ந்த மோகனன் (65), அவருடைய மனைவி வனஜாகுமாரி ஆகியோர் புருசோத்தமனை குறித்து பெருமையாக கூறி உள்ளனர்.
இதையடுத்து புருசோத்தமனும், குமுதவள்ளியும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார்கள். அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னர், தனது தொழில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி தனது மனைவி குமுதவள்ளியிடம் ரூ.3 கோடி வாங்கிவிட்டு சென்ற புருசோத்தமன் பின்னர் வீடு திரும்பவில்லை. பலமுறை அவருடைய செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குமுதவள்ளி தனது கணவரான புருசோத்தமன் குறித்து விசாரித்தபோது, அவர் தொழில் அதிபர் என்றுக்கூறி சென்னையை சேர்ந்த பேராசிரியை இந்திராகாந்தி, விமலா உள்பட 8 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து பலகோடி ரூபாய் சுருட்டியது தெரியவந்தது.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த குமுதவள்ளி, இது குறித்து கோவை மாநகர கிழக்கு மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அத்துடன் தலைமறைவாக இருந்த புருசோத்தமனையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இதற்கிடையே புருசோத்தமனின் மோசடிக்கு உடந்தையாக இருந்த மெட்டிஒலி திருமண தகவல் மையத்தை நடத்தி வந்த மோகனன், அவருடைய மனைவி வனஜாகுமாரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகிவிட்ட புருசோத்தமனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் புருசோத்தமன் திருச்சியில் பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத் தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த புருசோத்தமனை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் அவரை கோவை அழைத்து வந்து, ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புருசோத்தமனிடம் நேற்று 2-வது நாளாக விசாரணை நடந்தது. அப்போது போலீசார் அவரை வெள்ளலூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச்சென்று, அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு இருந்த சில முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதை வைத்து போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
புருசோத்தமனிடம் நடத்திய விசாரணையில், அவர் பெண்களை ஏமாற்றி சுருட்டிய பணத்தில் பல இடங்களில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே அவர் வாங்கிய சொத்துகள் எவ்வளவு? அதன் மதிப்பு, அந்த சொத்துகள் எங்கெங்கு உள்ளன? யாருடைய பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டு உள்ளன?, எவ்வளவு பணம் மோசடி செய்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம்.
அத்துடன் அவர் 8 பெண்களை தான் ஏமாற்றி திருமணம் செய்து உள்ளாரா?, வேறு யாராவது இவரிடம் ஏமாந்து, புகார் கொடுக்காமல் இருக்கிறார்களா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மோசடி செய்த பணத்தில் அவர் வாங்கி சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story