புதுவை முன்னாள் அமைச்சர் உள்பட பலர் கொலை: பெண் தாதா எழிலரசியுடன் 14 ரவுடிகள் கைது
கணவர் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் சதி திட்டம் தீட்டிய பிரபல பெண் தாதா எழிலரசி உள்பட 14 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
புதுச்சேரி,
புதுவையை அடுத்த காரைக்காலை அடுத்துள்ள திரு- பட்டினம் மலையான் தெருவை சேர்ந்தவர் ராமு என்கிற ராதாகிருஷ்ணன். சாராய வியாபாரியாக இருந்து பின்னர் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி வினோதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடை தொடர்ந்து 2-வது மனைவி எழிலரசியுடன் ராமு குடும்பம் நடத்தி வந்தார்.
இதனால் ஆத்திரமடைந்து ராமுவையும் எழிலரசியையும் கொலை செய்ய வினோதா திட்டமிட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 11.1.2013 காரைக்கால் காமராஜர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ராமுவும், எழிலரசியும் வழிமறித்து கூலிப்படையால் சரமாரியாக வெட்டப்பட்டனர். இதில் ராமு படுகொலை செய்யப்பட்டார். எழிலரசி காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்தநிலையில் கணவர் ராமு கொலையில் தொடர்புடையவர்களாக கருதப்படும் அனைவரையும் கொலை செய்ய எழிலரசி சபதம் எடுத்தார். இதைதொடர்ந்து வினோதா காரில் சென்ற போது சீர்காழி அருகே வழிமறித்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ராமுவின் கொலையில் தொடர்புடையதாக கருதப்பட்ட ராமு, வைத்தி ஆகியோரும் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்களுக்கு பின்னணியில் எழிலரசி இருந்ததாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதன்பின் ஜாமீனில் வெளியே வந்த எழிலரசி பெண் தாதாவாக வலம் வந்தார். தனது கணவர் ராமுவின் கொலையில் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமாருக்கும் தொடர்பு உண்டு என்று கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 3.1.2017 அன்று நிரவி முதல் சாலையில் கட்டப்பட்டு வந்த தனது திருமண மண்டபத்தை வி.எம்.சி.சிவக்குமார் பார்வையிட வந்தார். அப்போது அங்கு காரில் வந்த ஒரு கும்பல் வி.எம்.சி.சிவக்குமாரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பியது.
இந்த கொலை சதியிலும் பங்கு உண்டு என்பதால் எழிலரசியை போலீசார் கைது புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். சுமார் 10 மாதம் சிறையில் இருந்த அவர் கடந்த 8.11.2017 அன்று ஜாமீனில் வெளியில் வந்தார். இந்தநிலையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதிய எழிலரசி யாருக்கும் தெரியாத வகையில் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்தார்.
இந்தநிலையில் புதுவை காமராஜர் சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் ஒரு கும்பல் பயங்கர சதி திட்டத்தில் ஈடுபடுவதற்காக ஆலோசனை நடத்தி வருவதாக போலீஸ் டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் அந்த ஓட்டலை சுற்றி வளைத்தனர்.
அப்போது அங்குள்ள மாநாட்டு அறையில் பிரபல பெண் தாதா எழிலரசி தலைமையில் ஒரு கும்பல் சதி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் கோரிமேடு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதிரடியாக விசாரிக்கப்பட்டனர்.
இதில், ராமுவின் கொலையில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்த அவரது முதல் மனைவி வினோதாவின் தங்கை கணவர் ஆனந்தை கொலை செய்வது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்திய திடுக்கிடும் தகவல் வெளியானது.
மேலும் அவர்கள் காரைக்கால் விக்ரமன் (வயது39), வானரப்பேட்டை சூசைராஜ் (29), நெல்லித்தோப்பு விக்கி (23), திப்புராயப்பேட்டை கவுசிக பாலசுப்பிரமணியன் (35), கோவிந்தசாலை தினேஷ் (22), மூலகுளம் முரளி (20), அரவிந்த் (23), டி.வி. நகர் குணசேகரன் (22), உருளையன்பேட்டை கென்னடி நகர் ராம்குமார் (22), திப்புராய்ப்பேட்டை திபுலன் (22), வீராம்பட்டினம் வீரப்பன் (28), திப்புராய்பேட்டை தணிகையரசு (27), சவுந்திரபாண்டியன் (26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து எழிலரசி உள்பட 14 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் விக்ரமன் முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் தொடர்புடையவர் ஆவார். போலீசாரால் தேடப்பட்டு வந்த இவர் தற்போது தான் பிடிபட்டுள்ளார்.
கைதானவர்களிடம் இருந்து கார், 12 மோட்டார் சைக்கிள்கள், 5 கத்திகள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் அனைவரும் நேற்று மாலை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர மேலும் பலர் இந்த சதி ஆலோசனையில் ஈடுபட்டு இருந்துள்ளனர். அவர்களையும் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக மிகப்பெரிய கொலை சதி திட்டம் முறியடிக்கப்பட் டுள்ளது.

Related Tags :
Next Story