உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும்
உடன்குடி அனல்மின் நிலைய பணிகள் 2021-ம் ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்தார்.
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை அடுத்த கல்லாமொழி கிழக்கு கடற்கரை சாலை அருகில் ரூ.7 ஆயிரத்து 359 கோடி செலவில் 480 ஏக்கர் பரப்பளவில் தலா 660 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 எந்திரங்களுடன் கூடிய புதிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. சென்னையில் இருந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் உடன்குடி அனல் மின் நிலைய கல்வெட்டை திறந்து வைத்து, பணிகளை தொடங்கி வைத்தார். இதையொட்டி உடன்குடியில் நடந்த விழாவில் மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் பேசும்போது கூறியதாவது:-
உடன்குடியில் அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் வருகிற 2021-ம் ஆண்டுக்குள் நிறைவு பெற்று, செயல்பாட்டுக்கு வரும் வகையில் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. இங்கு அனல் மின் நிலையம் அமைப்பதின் மூலம் தென் மாவட்டங்களில் தொழில் வளம் பெருகும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தென் மாவட்டங்களில் மின்தட்டுப்பாடே இல்லை என்ற நிலை உருவாகும். தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலை திட்டம், கிழக்கு கடற்கரை ரெயில்வே பாதை அமைக்கும் திட்டம் போன்றவையும் மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அனல்மின் நிலையம் அமைக்கும் பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் உயர்த்தி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் எந்த இடையூறும் இன்றி, பணிகள் துரிதமாக நடைபெறும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மின்வாரிய தலைமை பொறியாளர் நடராஜன், திட்ட பொறியாளர் சுகிர்தன் தாஸ், பெல் நிறுவன பொது மேலாளர் சவுந்தர்ராஜன், உதவி மேலாளர் காசிராஜன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயகுமார், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவி ஆயிஷா கல்லாசி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பெருமாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில், வார்டு உறுப்பினர் குமாரவேல் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story