ஐ.ஆர்.பி.என். அலுவலகம் அமைக்க எதிர்ப்பு: அதிகாரிகளுடன் கிராமத்தினர் வாக்குவாதம்
நரம்பை பகுதியில் ஐ.ஆர்.பி.என். அலுவலகம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் கிராமத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பாகூர்,
புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கம் அடுத்துள்ள நரம்பை பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ஐ.ஆர்.பி.என். போலீஸ் பிரிவுக்காக 96 ஏக்கர் நிலத்தை அரசு தேர்வு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நரம்பை கிராம மக்கள், அப்போதைய மத்திய உள்துறை மந்திரி சிதம்பரத்திடம் மனு கொடுத்தனர். அவரும் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது, இந்த இடத்தில், கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், புதுச்சேரி போலீஸ் துறை உயர் அதிகாரிகள் அவ்வப்போது, அந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கு, நரம்பை கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், நேற்று காலை அமைச்சர் கந்தசாமி தலைமைச் செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி., சுனில்குமார், டி.ஐ.ஜி., ராஜீவ் ரஞ்சன், ஐ.ஆர்.பி., கமாண்டண்ட் ஐ.ஆர்.சி. மோகன். கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நரம்பை கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் டி.ஜி.பி., சுனில்குமார் கவுதம் பேசுகையில், ‘இங்கு, ஐ.ஆர்.பி.என். போலீஸ் பிரிவு அமைக்கப்பட்டால், உங்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு வராது. பாதுகாப்பு அரணாகவே இருப்போம். யாராவது தவறு செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உங்களின் பிள்ளைகளுக்காக, பள்ளி, விளையாட்டு திடல் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும். போலீஸ் துறை தொடர்பான வேலைவாய்ப்பிலும் உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்றார்.‘
தொடர்ந்து, அமைச்சர் கந்தசாமி பேசுகையில், ‘ஐ.ஆர்.பி.என்., போலீசுக்காக இடம் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே எதிர்ப்பை காட்டி இருக்க வேண்டும். இப்போது 20 ஏக்கர் மட்டுமே ஐ.ஆர்.பி.என். போலீஸ் பிரிவுக்கு ஒதுக்கப்படும் மீதமுள்ள இடம் சுற்றுலா திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். நரம்பை கிராம மக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதுச்சேரி- கடலுார் சாலையில் இருந்து ஐ.ஆர்.பி.என்., போலீஸ் பிரிவு இடத்திற்கு புதிய பாதை அமைத்து தரப்படும். சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் வெளியிட்டுள்ள உத்தரவில், எந்த திட்டத்திற்காக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டதோ, அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை என்றால், அந்த இடத்தை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி உள்ளது. இப்போது, இந்த திட்டத்தை செயல்படுத்த தவறினால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு இடம் மீண்டும் தனியாரிடம் செல்லும் நிலை ஏற்படும்’ என்றார்.
தொடர்ந்து, வம்பாபேட், பிள்ளையார்குப்பம், கிருமாம்பாக்கம் வழியாக, புதுச்சேரி கடலூர் சாலையில் இருந்து நரம்பை ஐ.ஆர்.பி.என். போலீஸ் பிரிவு, வம்பாபேட் உண்டு உறைவிடப்பள்ளி திட்டத்திற்கு இணைப்பு சாலை அமைப்பது குறித்து, அமைச்சர் கந்தசாமி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறுகையில், ‘ஐ.ஆர்.பி.என். அலுவலகம் அமைப்பது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்கப்படும்’ என்றார். ஆய்வின்போது, துணை மாவட்ட கலெக்டர் உதயகுமார், போலீஸ் சூப்பிரண்டுகள் தெய்வசிகாமணி, அப்துல் ரகீம், தாசில்தார் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Tags :
Next Story