முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேனி,
தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்து உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக இந்த அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்மட்ட உயர்வை கண்காணித்தல் மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்பார்வை செய்தல் போன்ற பணிகளுக்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவுக்கு உதவியாக 5 பேர் கொண்ட துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. துணை கண்காணிப்பு குழுவினர் அணையில் அவ்வப்போது ஆய்வு செய்து, அணை நிலவரம் குறித்து மூவர் கண்காணிப்பு குழுவுக்கு அறிக்கை அளித்து வருகின்றனர். கடைசியாக டிசம்பர் 2-ந்தேதி அணையை ஆய்வு செய்து இருந்தனர்
இந்த நிலையில், மூவர் கண்காணிப்பு குழுவின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பு குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வுக்கு துணை குழு தலைவரான மத்திய நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ராஜேஷ், தமிழக பிரதிநிதிகளான அணையின் செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி கோட்ட பொறியாளர் சாம்இர்வின் ஆகியோர் தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர். கேரள அரசின் பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை பொறியாளர் ஜார்ஜ்டேனியல், உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் வல்லக்கடவு வழியாக ஜீப் மூலம் அணைக்கு சென்றனர்.
இந்த குழுவினர் அணைக்கு சென்ற போது அணையின் நீர்மட்டம் 115.50 அடியாக இருந்தது. முல்லைப்பெரியாறு அணை, பேபி அணை, மதகு பகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டனர். பின்னர் அணையின் சுரங்கப்பகுதிக்கு சென்று கசிவுநீர் அளவை சேகரித்தனர்.
ஆய்வைத் தொடர்ந்து தேக்கடிக்கு திரும்பினர். பின்னர், குமுளி 1-ம் மைல் பகுதியில் உள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கசிவுநீர் அளவு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஒரு நிமிடத்துக்கு 33 லிட்டர் என்ற அளவில் கசிவு நீர் இருப்பதாகவும், அது இயல்பான அளவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், நீர்மட்டம் 142 அடியை எட்டும்போது, உபரிநீரை வெளியேற்றும் போது எவ்வளவு தண்ணீர் வெளியேறுகிறது? மதகு எவ்வளவு உயர்ந்துள்ளது? என்பது உள்ளிட்டவற்றை கணக்கிட நவீன கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. இந்த கருவிகள் பழுதடைந்து உள்ளதாகவும், அதை சரிசெய்ய வேண்டும் என்றும் கேரள பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, 2 அல்லது 3 நாட்களில் இதை சரி செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆய்வுக்கூட்டத்தை பிப்ரவரி மாதம் கடைசி அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்தில் நடத்துவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

Related Tags :
Next Story