உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளவே டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார், தங்கதமிழ்செல்வன் தகவல்
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காகவே டி.டி.வி.தினகரன் புதிய கட்சி தொடங்குகிறார் என்று தேனியில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசினார்.
தேனி,
டி.டி.வி.தினகரன் அணி சார்பில், செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனியில் நடந்தது. கூட்டத்தில், டி.டி.வி.தினகரனால் நியமிக்கப்பட்ட மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசும் போது கூறியதாவது:-
தமிழ்நாட்டில் டி.டி.வி.தினகரன் தலைமையில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி. நான் கடந்த 8 மாதங்களாக தினகரன் பின்னால் இருக்கிறேன். அப்போது எல்லாம் என்னை கட்சியை விட்டு நீக்கவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தோல்வியை தழுவியதால் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள்.
இன்னும் நான் உறுப்பினராக தான் உள்ளேன். இப்போது அ.தி.மு.க. உறுப்பினராக நான், நீக்கப்பட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டுள்ளேன். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் என்னை கட்சியை விட்டு நீக்கட்டும்.
தமிழகத்தில் பா.ஜ.க.விடம் அடிபணிந்து மானம் இல்லாத ஆட்சி நடக்கிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி, டி.டி.வி.தினகரன் பக்கம் தான் தொண்டர்களும், மக்கள் செல்வாக்கும் இருக்கிறது என்பதை காட்டியுள்ளது. உள்ளாட்சி தேர்தலிலும் குக்கர் சின்னம் கொடுத்தால் 100 சதவீதம் வெற்றி பெற்று பெறுவோம். ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வந்த பின், 30 அமைச்சர்களும் மக்களை சந்திக்க சென்றால், மக்கள் துரத்தி அடிப்பார்கள். அந்த அளவுக்கு பஸ் கட்டணம் உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால், அடுத்து ஆட்சி நம்முடையது தான். எதற்காக புதுக்கட்சி தொடங்க நினைக்கிறீர்கள் என்று தினகரனிடம் கேட்டேன். உள்ளாட்சி தேர்தல் வந்தால் ஒரே சின்னத்தில் போட்டியிட வேண்டும். அதற்கு ஒரு கட்சி தேவை என்றார். அதனால், தான் அ.தி.மு.க. அம்மா அணி என்ற பெயரில் கட்சியை நடத்த தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்போம். அதேநேரத்தில் சத்தியமாக அ.தி.மு.க. வையும், இரட்டை இலையையும் விட்டுவிட மாட்டோம்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், புதிய கட்சி தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம். எனவே, கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்யும் பணியில் நிர்வாகிகள் தீவிரம் காட்ட வேண்டும். ஒவ்வொரு கிளையிலும் 9 பேர் கொண்ட நிர்வாகிகள் இருந்தனர். இனி, 12 நிர்வாகிகள் கொண்ட பட்டியல் தயார் செய்யுங்கள். புதிய நிர்வாகிகள் பட்டியல் ஜெயலலிதா பிறந்த நாளுக்குள் வெளியிடப்படும்.
இவ்வாறு தங்கதமிழ்செல்வன் பேசினார்.

Related Tags :
Next Story