பஸ் கட்டண உயர்வை கண்டித்து 14 இடங்களில் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியல்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி,
தமிழக அரசு பஸ் கட்டணம் உயர்த்தியதை கண்டித்து தி.மு.க. தலைமையில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டு, கைதாகினர்.
தேனி மாவட்டத்தில் 14 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. தேனியில், தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதற்காக மதுரை சாலையில் பங்களாமேடு பகுதியில் இருந்து நேரு சிலை நோக்கி ஊர்வலமாக வந்தனர். பின்னர் நேரு சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் முருகேசன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தங்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட தோழமை கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 263 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னமனூர் காந்தி சிலை அருகில் நகர செயலாளர் முத்துகுமார், ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 81 பேர் கைது செய்யப்பட்டனர். மார்க்கையன்கோட்டை சந்திப்பில் மறியலில் ஈடுபட்ட நகர செயலாளர் முத்துக்குமார் தலைமையில் 105 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அதேபோல், போடி ரெங்கநாதபுரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 220 பேர் கைது செய்யப்பட்டனர். கூடலூர் பஸ் நிலையம் சந்திப்பு அருகில் தி.மு.க. நகர செயலாளர் லோகந்துரை தலைமையில் மறியல் செய்த 115 பேர் கைதாகினர். கோட்டூரில் ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி தலைமையில் மறியல் செய்த 108 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்கரை கல்லூரி சாலை சந்திப்பில் மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் மூக்கையா தலைமையில் மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 212 பேர் கைது செய்யப்பட்டனர். போடி தேவர் சிலை அருகில் நகர செயலாளர் செல்வராஜ் தலைமையில் மறியல் செய்த 147 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளத்தில் மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, நகர செயலாளர் அபுதாகிர் ஆகியோர் தலைமையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 96 பேர் கைதாகினர். கடமலைக் குண்டு பஸ் நிறுத்தத்தில் மறியல் செய்த ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி உள்பட 142 பேர் கைது செய்யப்பட்டனர். காமயகவுண்டன்பட்டி பஸ் நிறுத்தத்தில் மறியலில் ஈடுபட்ட 117 பேரும், கம்பம் போக்குவரத்து சிக்னலில் மறியல் செய்த முன்னாள் எம்.எல்.ஏ. கம்பம் ராமகிருஷ்ணன், முன்னாள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி செல்வேந்திரன், ஒன்றிய செயலாளர் செல்லபாண்டி உள்பட 105 பேரும், ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு மறியல் செய்த ஒன்றிய செயலாளர் மகாராஜன் உள்பட 225 பேரும் கைது செய்யப்பட்டனர்.
உத்தமபாளையம் பஸ் நிலையம் முன்பு நடந்த மறியலுக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரன் தலைமையில் தி.மு.க. ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் வக்கீல் பாஸ்கரன் உள்பட பலர் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 208 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாவட்டம் முழுவதும் 14 இடங்களில் நடந்த மறியலில் மொத்தம் 2 ஆயிரத்து 144 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில், 70 பேர் பெண்கள். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story