திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் த.மா.கா. கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Jan 2018 4:15 AM IST (Updated: 30 Jan 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் த.மா.கா.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர்,

பஸ் கட்டண உயர்வு, மத்திய-மாநில அரசுகளின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் நேற்று த.மா.கா. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே திருவள்ளூர் தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விக்டரி எம்.மோகன் தலைமை தாங்கினார். இதில் மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.மனோகரன், மாநில இணைசெயலாளர் ஜெயக்குமார், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட துணைத்தலைவர் வேப்பம்பட்டு அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட த.மா.கா. சார்பில் காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மலையூர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் பாபுநாயுடு உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பஸ் கட்டண உயர்வு, மணல் தட்டுப்பாடு, கிராம பஞ்சாயத்துகளில் நிர்வாக சீர்கேடு, பாலாற்றில் இரண்டு தடுப்பணை கட்டுதல், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினர்.

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு த.மா.கா. மாவட்ட தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் திருவேங்கடம், நகர தலைவர் பாண்டுரங்கன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story