விதிகளை மீறி அரசு வக்கீல்களை நியமிக்க தடை, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விதிகளை மீறி அரசு குற்றவியல் வக்கீல்களை நியமிக்க தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வக்கீல் கண்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் உள்ள ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட கோர்ட்டுகளில் கடந்த 40 ஆண்டுகளாக திறமை, தகுதியை கருத்தில் கொள்ளாமல் அரசு வக்கீல்களாக ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த பதவிக்கு வந்த பிறகும் அவர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர்.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில் சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளை ஆகியவற்றில் அரசு வக்கீல்கள் நியமனம் குறித்து தமிழக அரசு புதிய விதியை உருவாக்கியது. இந்த விதிகளிலும் வக்கீல்களின் தகுதி, திறமையை மதிப்பிடுவதற்கான நடவடிக்கைகள் வகுக்கப்படவில்லை.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளைக்கு புதிய அரசு வக்கீல்களை நியமித்து கடந்த 4-ந்தேதி பொதுத்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டார். புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்களில் சிலர் அரசு வக்கீல்களாக நியமனம் செய்யப்படுவதற்கு தேவையான அனுபவம் இல்லாதவர்கள்.
அரசு வக்கீல்கள் அனைத்து வழக்குகளிலும் அரசு சார்பில் தங்களின் வாதத்தை எடுத்து வைக்க வேண்டும். இதற்கு தகுதி, திறமை இருக்க வேண்டும். தகுதி, திறமை இல்லாமல், கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக நியமனம் செய்யப்படும் அரசு வக்கீல்களுக்கு வாதத்திறமை இல்லாததால் வழக்குகள் தோல்வியடைகின்றன. பின்னர் மேல்முறையீடு செய்து அரசு பணத்தை விரயமாக்குகின்றனர்.
எனவே புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள அரசு வக்கீல்களின் பணி அனுபவம் குறித்து ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல், மதுரை ஐகோர்ட்டு கிளை பதிவாளர் (நீதித்துறை) ஆகியோர் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் அரசு வக்கீல்களின் முன்நடத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.க்கும் உத்தரவிட வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு மற்றும் மதுரை ஐகோர்ட்டு கிளை அரசு வக்கீல்கள் நியமனம் தொடர்பாக பொதுத்துறை முதன்மை செயலாளர் பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, அனைத்து வக்கீல்களிடமும் விண்ணப்பம் பெற்று தகுதியானவர்களை அரசு வக்கீல்களாக நியமிக்கவும், அதுவரை புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஐகோர்ட்டுகளில் வக்கீல்களாக பணியாற்றினால் தானே அனுபவம் பெற்று அரசு வக்கீல்களாக சிறப்பாக பணியாற்ற முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர் நிர்ணயிக்கப்பட்ட விதிகளையும், தகுதிகளையும் மீறி அரசு வக்கீல்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா? அவர்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளனவா? போலீசாரிடம் தடையில்லா சான்று பெறப்பட்டதா? என்பது குறித்து சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் ஜெனரல், பொதுத்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்டவர்கள் பிப்ரவரி மாதம் 14-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட விதிகளையும், தகுதிகளையும் மீறி அரசு குற்றவியல் வக்கீல்களை நியமிக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story