பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி மறியல் 4 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4,964 பேர் கைது
மாவட்டத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி 19 இடங்களில் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
தமிழக அரசு பஸ்கட்டணத்தை கடுமையாக உயர்த்தியை தொடர்ந்து தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய லீக் உள்ளிட்ட கட்சிகள் கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பஸ்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அடுத்த கட்டமாக சாலை மறியலில் ஈடுபடப்போவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதற்கிடையில் தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைப்பதாக அறிவித்தது. எனினும் இந்த அறிவிப்பு வெறும் கண்துடைப்பே என்று கூறிய மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்தபடி சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள முடிவு செய்தது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 19 இடங்களில் தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டையில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 3 பெண்கள் உள்பட 451 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது சாத்தூர் ராமச்சந்திரன், இந்த போராட்டம் தொடரும் எனவும் பஸ் கட்டணம் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே கோரிக்கை என்றும் கூறினார். மறியலில் முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் சுப்பாராஜ், மாவட்ட பொருளாளர் சாகுல்அமீது, நகர செயலாளர் மணி, ஒன்றிய செயலாளர்கள் பொன்ராஜ், பாலகணேஷ், இளைஞரணி துணை செயலாளர் சுரேஷ்குமார், மீனவரணி செயலாளர் சொக்கலிங்கம், ஊராட்சி செயலாளர் பாரதி, ம.தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தாமஸ், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், காங்கிரஸ் நகர தலைவர் லட்சுமணன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மதார்கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மல்லாங்கிணறில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரான தங்கம்தென்னரசு எம்.எல்.ஏ. தலைமையில் மறியலில் ஈடுபட்ட 7 பெண்கள் உள்பட 623 பேர் கைது செய்யப்பட்டனர். காரியாபட்டியில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்லம், நகர செயலாளர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் சண்முகசாமி உள்பட 272 பேர் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
விருதுநகரில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ. ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம் தலைமையில் 170 பெண்கள்உள்பட 580 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானா முன்பு தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் எம்.பி. லிங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், ம.தி.மு.க., ஆதி தமிழர் பேரவையை சேர்ந்த 100 பெண்கள் உள்பட 543 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையம் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி. ராஜன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஸ்கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று கோஷமிட்டு சாத்தூரில் மறியலில் ஈடுபட்ட 333 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல ஆலங்குளத்தில் நடந்த மறியலில் முன்னாள் எம்.எல்.ஏ. ஞானதாஸ் உள்பட 76 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

Related Tags :
Next Story