வள்ளலார் நினைவு தினம்: சென்னையில், நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவு
வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில், நாளை இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு உத்தரவின் படி பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இறைச்சி கூடங்கள், மற்றும் இறைச்சிக் கடைகள் ஆகியவை நாளை(புதன்கிழமை) வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு மூடப்பட வேண்டும்.
மேலும் வணிக வளாகங்களிலும், பல்பொருள் அங்காடியிலும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி விற்கவும் கூடாது. இந்த உத்தரவை அனைத்து வியாபாரிகளும் செயல் படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்த தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story