தாய் இறந்ததால் பரிதவித்த குட்டி குரங்குகள்
விளையாடி கொண்டிருந்த தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்தது, தாய் இறந்ததால் பரிதவித்த குட்டி குரங்குகள்.
திருவள்ளூர்,
திருவள்ளூர், சி.வி.நாயுடு சாலையில் உள்ள மின்கம்பங்களில் 2 சிறிய குரங்குகளுடன் தாய் குரங்கு தாவிக்குதித்து விளையாடி கொண்டிருந்தது. அப்போது திடீரென தாய் குரங்கின் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட தாய் குரங்கு தரையில் விழுந்து உயிரிழந்தது. இதையடுத்து குட்டி குரங்குகள் அசைவற்று கிடந்த தாய் குரங்கை எழுப்ப வந்தன. அதனை பிடித்து இழுப்பது, அதன் மீது தலை வைத்து படுத்து எழுப்ப முயன்றன. பின்னர் அவை தாய் குரங்கின் உடலை சுற்றி சுற்றி வந்து கத்தின. மேலும் பொதுமக்களையும் அருகில் வரவிடாமல் விரட்டின.
தாய் இறந்ததால் பரிதவித்து நின்ற குட்டி குரங்குகளை பார்த்த பொதுமக்கள் கண் கலங்கினர். நீண்ட நேரத்துக்கு பின்னர் குட்டிகுரங்குகள் அங்கிருந்து சென்றன. நகராட்சி ஊழியர்கள் குட்டி குரங்குகள் செல்லும் வரை காத்திருந்து உயிரிழந்த தாய் குரங்கின் உடலை அப்புறப்படுத்தினர்.

Related Tags :
Next Story