மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் பட்டினி போராட்டம்


மிளகாய் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரத்தில் விவசாயிகள் சங்கத்தினர் பட்டினி போராட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

மிளகாய் பயிருக்கு முழுமையாக இழப்பீடு வழங்கக்கோரி ராமநாதபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பட்டினி போராட்டம் நடைபெற்றது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டத்தில் கடந்த 2016-17-ம் ஆண்டிற்கான வேளாண் காப்பீடு திட்டத்தின்கீழ் பதிவு செய்த சிகப்பு மிளகாய் விவசாயிகளுக்கு 100 சதவீத இழப்பீட்டை முழுமையாக வழங்கக்கோரி பட்டினி போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மயில்வாகனன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முத்துராமு பட்டினி போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் சேதுராமு, மாவட்ட துணை செயலாளர்கள் நவநீதகிருஷ்ணன், கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர்.

மாவட்டத்தில் கடந்த 2016-17ம் ஆண்டில் சிகப்பு மிளகாய் பயிர் காப்பீடு செய்து பாதிக்கப்பட்ட 55 வருவாய் கிராமங்களுக்கு 100 சதவீத இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசப்பட்டது. போராட்டத்தில் தாலுகா செயலாளர்கள் சுப்பிரமணியன், மகாலிங்கம், பொன்னுச்சாமி, தங்கச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், மாநில துணை தலைவர் முகமது அலி பட்டினி போராட்டத்தினை முடித்து வைத்து பேசினார். 

Next Story