சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கோரி அரசுக்கு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் அலுவலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் திலீப்குமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செல்வம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். விவசாயிகள் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், திருப்புவனம் சேங்கைமாறன், சந்திரன், ஆப்ரகாம், அய்யாச்சாமி, வீரபாண்டியன், தண்டியப்பன், முத்துராமலிங்கம், கன்னியப்பன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் விவசாயி குணசேகரன் பேசியதாவது:- சென்ற ஆண்டை போல் இந்த ஆண்டும் சிவகங்கை மாவட்டத்தில் போதிய மழை இல்லாமல் வறட்சி ஏற்பட்டுள்ளது. எனவே அதிகாரிகள் அரசுக்கு இதுதொடர்பாக அனுப்பும் அறிக்கையில் வறட்சி பாதிப்பு என்று அனுப்ப வேண்டும். அப்போது தான் முழுமையான பயிர் காப்பீடு பெற முடியும்.
வேளாண் இணை இயக்குனர் செல்வம்:- மாவட்டத்தில் 69 ஆயிரத்து 200 எக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் வறட்சி குறித்த கணக்கு எடுத்து வருகின்றனர்.
குணசேகரன்:- மாவட்டத்தில் வறட்சி என்று அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா?
வருவாய் அலுவலர் இளங்கோ:- அரசு கேட்டால் தான் அனுப்ப முடியும்.
விவசாயி சேங்கைமாறன்:- சூராணத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. இறந்தவர்களின் பெயரில் உள்ள பட்டாவை பயன்படுத்தி, வேறு நபர்கள் பயிர் செய்வது போல் பதிந்துள்ளனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயி சந்திரபோஸ்:- சூராணத்தில் எனது உறவினர் பெயரில் உள்ள பட்டாவை வேறு ஒருவர், அடங்கல் உள்ளிட்டவை கொடுத்து பதிந்துள்ளனர். இதுபோன்று ஏராளமானவர்கள் பெயரில தவறு செய்துள்ளனர். மேலும் இறந்தவர்களின் பெயரில் உள்ள பட்டாவை வேறு நபர் பெயருக்கு அடங்கல் உள்ளிட்ட ஆவணங்களை எந்த கிராம நிர்வாக அதிகாரி கொடுத்துள்ளார் என்று விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூட்டுறவு துறை இணை பதிவாளர் திலீப்குமார்:- சூராணம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2016-17-ம் ஆண்டிற்கு 962 பேருக்கு பயிர் காப்பீட்டு தொகை வந்தது. இந்த பயிர் காப்பீட்டு தொகை பதிவு செய்ததில் ஏற்பட்ட புகார் குறித்து விசாரணை செய்ததில் இங்கு 8 விதமான தவறுகள் நடந்தது தெரிந்தது. அதிக அளவு முறைகேடுகள் நடந்ததால் அங்கிருந்த பதிவேடுகள் அனைத்தையும் பறிமுதல் செய்துவிட்டோம். இதில் நேரடி பட்டா உள்ள 512 பேருக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு விட்டது. மீதி உள்ளவர்கள் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த சங்கத்தின் செயலாளர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போது கூறப்படும் புகார்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
பின்னர் விவசாயிகள் சேங்கைமாறன், குணசேகரன் உள்ளிட்டோர், மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மற்றும் தென்மேற்கு பருவமழை குறித்த விவரத்தை கேட்டனர். இதற்கு பதில் அளித்த சம்பந்தபட்ட அதிகாரி, அதனை உடனடியாக தர முடியாது என்றார். இதனால் கூட்டத்தில் சிறிது வாக்குவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து விவசாயி முத்துராமலிங்கம் பேசியதாவது:- எந்த கேள்வி கேட்டாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த பதிலும் தருவதில்லை. இப்படி இருந்தால் எப்படி விவசாயிகள் தங்களது குறைகளை கூறமுடியும்.
குணசேகரன்:- வறட்சி நிலை குறித்த அறிக்கை தயார் செய்து வருகிறோம், அரசு கேட்டால் தான் தர முடியும் என்று கூறினீர்கள். மழை அளவு கேட்டால் சரிபார்க்க வேண்டும் என்கிறீர்கள். திடீரென்று அரசு கேட்டால் எப்படி தருவீர்கள். கூட்டத்தில் சொல்லும் பதில் சரியானதாக இருக்க வேண்டும். மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் அறிக்கை அனுப்ப முடியாது என்றால், மன்ற கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை தீர்மானமாக நிறைவேற்றி அனுப்ப வேண்டும்.
வருவாய் அலுவலர் இளங்கோ:- அறிக்கையை அனுப்பி வைக்கிறோம்.
அய்யாச்சாமி:- மாவட்டத்தில் அதிக அளவில் மணல் திருட்டு நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன?
வருவாய் அலுவலர் இளங்கோ:- மணல் திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது வாகன டிரைவருடன், உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்வேறு பொருட்களின் மீது விவாதம் நடைபெற்றது.

Related Tags :
Next Story