சுகாதாரத் துறை செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐகோர்ட்டில் டாக்டர் ரேவதி கயிலைராஜன் வழக்கு
கோர்ட்டு உத்தரவுப்படி மருத்துவக் கல்வி இயக்குனர் பணியிடத்தை நிரப்பாததால் சுகாதாரத்துறை செயலாளர் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி ஐகோர்ட்டில் ரேவதி கயிலை ராஜன் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
மதுரை,
தமிழக மருத்துவக் கல்வி இயக்குனராக டாக்டர் எட்வின்ஜோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதை எதிர்த்து கரூர் மருத்துவக்கல்லூரி டீன் ரேவதி கயிலைராஜன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், பணி மூப்பு அடிப்படையில் தனக்கு தான் மருத்துவக்கல்வி இயக்குனர் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, எட்வின்ஜோ நியமனத்தை ரத்து செய்து, உடனடியாக ரேவதி கயிலைராஜனை மருத்துவ கல்வி இயக்குனராக நியமிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை முடிவில், மருத்துவக்கல்வி இயக்குனர் நியமனம் தொடர்பான அரசாணையையும், தனி நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்து ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது மேலும் அந்த பதவிக்கு தகுதியான நபரை 6 வாரத்தில் பரிசீலித்து நியமிக்கவும் டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ரேவதி கயிலைராஜன் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவக்கல்வி இயக்குனர் பதவிக்கு தகுதியானவரை தேர்வு செய்து 6 வாரத்தில் நியமிக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த பதவி காலியாக இருப்பதாக அரசு அறிவித்து உள்ளது. எனவே கோர்ட்டு உத்தரவை நிறைவேற்ற தவறிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
முடிவில், இந்த வழக்கு குறித்து விளக்கம் கேட்டு தெரிவிக்க வேண்டும் என்று அரசு வக்கீலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Tags :
Next Story