துப்புரவு பணியாளர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம்
நெல்லை மாவட்டத்தில், துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.
நெல்லை,
நகரசபை, கிராம பகுதி மற்றும் நெல்லை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மற்றும் திரவக்கழிவு மேலாண்மையில் துப்புரவுப் பணியாளர்கள் பங்கு மிகவும் முக்கியமானது. இது தவிர கிராம உள்ளாட்சி அமைப்புகள், ஆஸ்பத்திரிகள், உணவகங்கள் மற்றும் பிற தனியார் நிறுவனங்களிலும் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வேலை சூழல் காரணமாக அவர்களுக்கு பல்வேறு உடல் நலப்பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பணியாளர்களின் குழந்தைகள் உயர் கல்வி பெற்று வேறு பணிகளுக்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இந்த பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.
துப்புரவு பணியாளர்களின் குழந்தைகள் குறைந்த பட்சம் பட்டப்படிப்பு படிக்க வைக்க வேண்டும், மாற்று வேலை வாய்ப்புகளை பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிக்க வேண்டும்.
வங்கிகடன் மற்றும் பொருளாதர உதவிகளை பெற்றுத்தர தேவையான உதவிகளை செய்ய வேண்டும், இந்த பணியாளர்களின் உடல் நலன் காக்கும் வகையில் மருத்துவ உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும், இந்த பணியாளர்களுக்கான சட்ட உதவிகளை வழங்க வேண்டும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை ஒருங்கிணைத்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்பதே புதிய திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இந்த திட்டத்தினை செயல்படுத்த துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது. இதற்கான தகவல் அளிக்கும் படிவங்கள் மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், நகரசபை ஆணையாளர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் டவுன்பஞ்சாயத்து அலுவலகங்களின் கிடைக்கும்.
இந்த படிவங்களை துப்புரவு பணியாளர்கள் பெற்று அதில் குறிப்பிட்டு உள்ள விவரங்களை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தகவல் சேகரிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) மாதம் 15-ந் தேதி வரை நடைபெறும். துப்புரவு பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு, விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story