பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:45 AM IST (Updated: 31 Jan 2018 12:55 AM IST)
t-max-icont-min-icon

பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கோவையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை,

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரியும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கோவை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் வி.ஆர்.வேலுமயில், தெற்கு மாவட்ட பொருளாளர் முத்துபாண்டியன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதற்கு மாநில முதன்மை பொதுச்செயலாளர் என்.என்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளதால், ஏழை-எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர் கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகளவில் கட்டணத்தை உயர்த்திவிட்டு, பெயருக்கு சிறிய அளவில் மட்டுமே கட்டணம் குறைக்கப்பட்டு உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நம்மைவிட பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் கூட பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தால் கூட இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை குறையவில்லை. மாறாக உயர்த்தப்பட்டு வருகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை யையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story