சுற்றுலா பயணிகளை நடுவழியில் இறக்கி விட்டதால் பஸ் சிறைபிடிப்பு
கூடுதல் செலவானதாக கூறி நடுவழியில் இறக்கி விட்டதால் தனியார் பஸ்சை சுற்றுலா பயணிகள் சிறைபிடித்தனர்.
கோவை,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரி பட்டணம் என்ற இடத்தில் இருந்து கோவையை சேர்ந்த ஒரு தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம் தமிழ்நாடு, கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கு 5 நாள் சுற்றுலா அழைத்துச்செல்லப்பட்டது. காவேரிபட்டணம் பகுதியை சேர்ந்த 50 பேர் இந்த பஸ்சில் சுற்றுலா சென்றனர். இந்த நிலையில் பயணத்தின் போது குமுளி அருகே சுற்றுலா பஸ் திடீரென்று பழுதானது. வண்டி பழுதடைந்ததற்கான செலவுகளை பயணம் மேற்கொண்டவர்களே செய்ததாக கூறப்படுகிறது. 25-ம் தேதியில் இருந்து 29-ந்தேதி வரை 5 நாட்கள் சுற்றுலா என்று திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், பயண திட்டத்தில் மேலும் ஒரு நாள் கூடியது.
இந்நிலையில் நேற்று கோவை வந்த சுற்றுலா பஸ் ஓட்டுனரும், சுற்றுலா ஏற்பட்டாளர்களும் பஸ் இதற்கு மேல் இயங்காது என்றும், அரசு பஸ் மூலம் ஊருக்கு செல்லும்படியும் தெரிவித்தனர். பாதியில் இறக்கி விட்டதால் ஆவேசமடைந்த சுற்றுலா பயணிகள் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பாக தனியார் பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஓட்டுனருக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது.
‘டீசல் போட்டது, வண்டி ரிப்பேர் செலவு என 28 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து இருப்பதாகவும், இந்தநிலையில் சொன்னபடி ஊரில் இறக்கிவிடாமல், இங்கிருந்து போகச்சொன்னால் சரியல்ல’ என்றும் கூறி பயணிகள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமரசப்படுத்தியதுடன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அதே தனியார் பஸ் மூலம் பொதுமக்களை கிருஷ்ணகிரிக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டதை கைவிட்டனர். சுமார் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தைக்கு பிறகு சுற்றுலா வந்த அதே பஸ்சில் காவல்துறையினர் பயணிகளை அனுப்பி வைத்தனர். இதனால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது.

Related Tags :
Next Story