போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நடிகை சுருதி உள்பட 4 பேர் கைது
கோவையில் போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் நடிகை சுருதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
கோவை பாப்பநாயக்கன்பாளையம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சுருதி (வயது 21). இவர் ‘ஆடி போனா ஆவணி’ என்ற சினிமாவில் நடித்து உள்ளார். அது இன்னும் வெளியாகவில்லை.இந்தநிலையில் அவர் திருமண ஆசைகாட்டி என்ஜினீயர்கள், பணக்கார வாலிபர்களை மடக்கி பலகோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது.
இதில் பாதிக்கப்பட்ட என்ஜினீயர் பாலமுருகன் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 10-ந் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் சுருதியை கைது செய்தனர். அத்துடன் சுருதியின் மோசடி செயலுக்கு உடந்தையாக இருந்த அவருடைய தாயார் சித்ரா, வளர்ப்பு தந்தை பிரசன்ன வெங்கடேஷ், தம்பி சுபாஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டு உள்ளனர்.
இதற்கிடையே பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள வீட்டில் சுருதியை கைது செய்தபோது, அவருடைய நண்பரான சபரிநாத் போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். அத்துடன் சபரிநாத், சுருதி உள்பட 5 பேர் சேர்ந்து ஆயுதப்படை போலீஸ்காரரான சாகுல் ஹமீதுவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சாகுல் ஹமீது கொடுத்த புகாரின்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சபரிநாத், சுருதி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் சபரிநாத்தை போலீசார் கடந்த 10-ந் தேதியே கைது செய்தனர். திருமண ஆசைகாட்டி பலரை ஏமாற்றிய வழக்கில் சுருதி உள்பட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்ததால், போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் அவர்களை உடனடியாக கைது செய்ய முடியவில்லை.
இதற்கிடையே, இந்த வழக்கில் சுருதி உள்பட 4 பேரை கைது செய்ய கோர்ட்டில் அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர். அதற்கு கோர்ட்டு அனுமதி கொடுத்ததை தொடர்ந்து, நேற்று ரேஸ்கோர்ஸ் போலீசார் சுருதி உள்பட 4 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் சிறையில் இருப்பதால் அவர்களை கைது செய்த தகவல் கோவை மத்திய சிறை அதிகாரிகள் மற்றும் அவர்கள் 4 பேருக்கும் தெரிவிக்கப் பட்டது.
மேலும் போலீசார் அவர்கள் 4 பேரையும், இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் அவர்களை கோவை 3-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு வேலுசாமி அவர்கள் 4 பேரையும் வருகிற 13-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக, போலீசார் சுருதி உள்பட 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, சுருதியின் தம்பி சுபாஷ், தான் பிளஸ்-2 படித்து வருவதாலும், பிளஸ்-2 பொதுத்தேர்வு விரைவில் வர உள்ளதால் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு மாஜிஸ்திரேட்டு, நீ தற்போது என்ன படித்து வருகிறாய் என்பது எங்களுக்கு தெரியாது. எனவே ஜாமீன் வேண்டும் என்றால் வக்கீல் மூலம் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். ஏற்கனவே அவர்கள் 4 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story