பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த போலீஸ்காரர்
திருச்சி கே.கே.நகர் மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் பூட்டிய வீட்டில் ஆயுதப்படை போலீஸ் காரர் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.
கே.கே.நகர்,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு அருகே உள்ள கீழையூரை சேர்ந்தவர் தனபால். இவரது மகன் தங்கபாக்கியம் (வயது 33). திருமணமாகாதவர். போலீஸ்காரரான இவர் திருச்சி மாநகர ஆயுதப்படை டிரைவராக பணிபுரிந்து வந்தார். இதனால் கே.கே.நகரில் உள்ள மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து நேற்று காலை தூர்நாற்றம் வீசியது.
ஆனால் வீட்டின் கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதே குடியிருப்பில் வசிக்கும் மற்ற போலீஸ்காரர்கள் இதுகுறித்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது தங்கபாக்கியம் மர்மமான முறையில் படுக்கையில் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவரது உடல் அருகே மது பாட்டில்களும் கிடந்தன.
போலீசார் விசாரணை
இதனை தொடர்ந்து தங்கபாக்கியத்தின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கபாக்கியம் இறந்தது குறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர். அவர்கள் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தங்கபாக்கியத்தின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவரது உடலின் அருகே மது பாட்டில்கள் கிடந்ததால் தங்கபாக்கியம் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் இறந்திருக்கலாம் அல்லது மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் எப்படி இறந்தார்? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இறந்த தங்கபாக்கியம் தற்போது மருத்துவ விடுப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story