வீட்டின் அருகே விளையாடியபோது பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவன் பத்திரமாக மீட்பு; 3 பேர் கைது
பெங்களூருவில் வீட்டின் அருகே விளையாடியபோது பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
பெங்களூரு,
பெங்களூருவில் வீட்டின் அருகே விளையாடியபோது பணத்திற்காக கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்த போலீசார், இன்னொருவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
சிறுவன் கடத்தல்
பெங்களூரு மாகடி ரோடு அருகே உள்ள மஞ்சுநாத் நகரில் வசித்து வருபவர் ராஜேஷ். இவருடைய மகன் சந்தன் (வயது 6). கடந்த 28-ந் தேதி மதியம் சந்தன் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். நீண்ட நேரம் ஆகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் தனது மனைவியுடன் சேர்ந்து சந்தனை அக்கம்பக்கத்து வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார்.
எங்கு தேடியும் அவன் கிடைக்கவில்லை. மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சந்தனை கடத்திச் சென்றதாக சிலர் அவர்களிடம் தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ந்து போன ராஜேஷ் உடனடியாக கே.பி.அக்ரஹாரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார்கள்.
பணம் கேட்டு மிரட்டல்
இதற்கிடையே, ராஜேசுக்கு போன் செய்த மர்மநபர்கள், சந்தனை உயிருடன் ஒப்படைக்க வேண்டும் என்றால் ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் எனக்கூறி மிரட்டினார்கள். இதனால் பயந்துபோன அவர் தனது மகனை மர்மநபர்கள் கடத்தி சென்றதோடு, பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, போலீசார் சந்தனை மீட்டு கடத்தல்காரர்களை கைது செய்ய 3 தனிப்படைகளை அமைத்தனர். தனிப்படை போலீசார் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண்ணை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது, அந்த செல்போனில் இருந்து கடத்தல்காரர்கள் அடிக்கடி ராஜேஷ் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரான அபிஷேக்(23) என்பவருக்கு போன் செய்திருப்பது தெரியவந்தது.
கார் சுற்றி வளைப்பு
இதையடுத்து அபிஷேக்கை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சந்தனை தனது நண்பர்கள் திவ்யதேஜா, ஹர்ஷித், ஸ்ரீகாந்த் ஆகியோர் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவதாக அவர் கூறினார். மேலும், தனது நண்பர்கள் இருக்கும் இடத்தையும் அபிஷேக் போலீசாரிடம் தெரிவித்தார். அதையடுத்து, கடத்தலில் தொடர்பு கொண்டதாக கூறி அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், அபிஷேக் கொடுத்த தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தனிப்படை போலீசார் கடத்தல் காரர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்படி, அவர்கள் பதுங்கி இருந்த கெங்கேரி அருகே உள்ள கொம்மகட்டே ரோட்டுக்கு நேற்று நள்ளிரவில் தனிப்படை போலீசார் சென்று காரில் இருந்த கடத்தல்காரர்களை சுற்றி வளைத்தனர்.
துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்
மேலும், சிறுவன் சந்தனை ஒப்படைத்துவிட்டு சரண் அடையும்படி கடத்தல்காரர்களிடம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அவர்கள் போலீசாரின் பேச்சுக்கு செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில் காரில் இருந்து கீழே இறங்கிய திவ்யதேஜா என்பவர், போலீசாரை கத்தியால் தாக்க முயன்றார். அப்போது சுதாரித்துக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சு, போலீசாரின் சுயபாதுகாப்புக்காக திவ்யதேஜாவை நோக்கி 2 முறை துப்பாக்கியால் சுட்டார்.
இதில் ஒரு குண்டு அவருடைய காலில் பாய்ந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே, காரை நெருங்கிய போலீசார் அதில் இருந்த ஹர்ஷித்(18), சாம்ராஜ்பேட்டை விட்டல் நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த்(19) ஆகியோரையும் கைது செய்தனர்.
பத்திரமாக சிறுவன் மீட்பு
மேலும், காரில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த சந்தனை போலீசார் பத்திரமாக மீட்டனர். குண்டு காயம் அடைந்து கைதான திவ்யதேஜாவுக்கு விக்டோரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீட்கப்பட்ட சிறுவன் சந்தனுக்கு மருத்துவமனையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், அவன் அவனுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான். இந்த கைது நடவடிக்கை குறித்து போலீசார் கூறியதாவது:-
கொலை முயற்சி-கடத்தல் வழக்குகள்
கைதான அபிஷேக்கின் வீட்டில் ராஜேஷ் வசித்து வருகிறார். எனவே, ராஜேசின் மகன் சந்தனை கடத்தி, பணம் பறிக்க அபிஷேக் திட்டமிட்டுள்ளார். திட்டப்படி கடந்த 28-ந் தேதி வீட்டு முன்பு நின்ற சந்தனை, ராஜேசின் கூட்டாளிகளான திவ்யதேஜா, ஸ்ரீகாந்த் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றனர். இந்த வழக்கில் மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கைதான திவ்யதேஜா கஸ்தூரிபா நகரை சேர்ந்தவர். இவர் மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி வழக்குகள் ஜே.ஜே.நகர் போலீஸ் நிலையத்தில் பதிவாகி உள்ளது. இதுதவிர வேறு சில வழக்குகளும் அவர் மீது உள்ளன. தற்போதும் அவர் மீது கொலை முயற்சி, கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

Related Tags :
Next Story