யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அரசியலில் வெற்றியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள் தினகரன் சொல்கிறார்
“நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.
பெங்களூரு,
“நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில் வெற்றியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள்” என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.
சசிகலாவுடன் சந்திப்பு
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கடைசியாக கடந்த 12-ந் தேதி நேரில் சந்தித்து பேசினார். இந்த நிலையில் பெங்களூரு சிறையில் சசிகலாவை டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நேற்று நேரில் சந்தித்து பேசினார். அவருடன் அவருடைய மனைவி அனுராதா மற்றும் வக்கீல்கள் இருந்தனர். இதற்காக பகல் 1.05 மணிக்கு சிறைக்குள் சென்ற அவர் 2.05 மணிக்கு சிறையை விட்டு வெளியே வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறையில் எனது சித்தியை நேரில் சந்தித்து பேசினேன். அவர் 31-ந் தேதி(அதாவது இன்று) வரை மவுன விரதம் இருக்கிறார். அதனால் அவர் பேசவில்லை. சில விஷயங்கள் குறித்து நான் எடுத்த முடிவுக்கு ஆதரவும், ஆசியும் வழங்கினார். அரசியல் நிலவரம் குறித்து நான் எடுத்துக் கூறினேன். விதிமுறைகள்படி சசிகலாவை 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திக்க முடியும். அந்த விதிமுறைப்படியே நான் சந்திக்கிறேன். 40 நிமிடங்கள் வரை சசிகலாவுடன் பேச அனுமதிக்கிறார்கள்.
அரசியலுக்கு வரலாம்
சில நேரங்களில் சிறையில் இருந்து வெளியே வர தாமதம் ஆகிறது. காரணம் ஒவ்வொருவராக சந்திக்கிறோம். அதனால் மற்றவர்கள் வருகைக்காக காத்திருந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வருகிறோம். இந்த விஷயத்தில் நாங்கள் எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை. அவ்வாறு வெளியான புகார் தவறானது.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் உள்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இதை குடும்ப அரசியல் என்று சொல்ல முடியாது. அரசியல் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று இல்லை. ஆனால் அவர்களை மக்கள் ஏற்க வேண்டும். அரசியலில் அவர்கள் வெற்றியை மக்கள் தான் தீர்மானிப்பார்கள். பஸ் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து நாங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம்.
மக்களின் ஆதரவு இல்லை
உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை சந்திக்க கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு செய்துள்ளோம். வருகிற 6-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களின் ஆதரவு இல்லை.
வருகிற 2-ந் தேதி முதல் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்துள்ளேன். தஞ்சை மாவட்டத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்குகிறேன். எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் விசாரணை முடிவடைந்து உள்ளது. என்ன தீர்ப்பு வருகிறது என்பதை பார்த்துவிட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுப்போம்.
இவ்வாறு டி.டி.வி.தினகரன் கூறினார்.

Related Tags :
Next Story