பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டருக்கு தீவிர சிகிச்சை


பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விஷம் குடித்த அரசு பஸ் கண்டக்டருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 31 Jan 2018 4:30 AM IST (Updated: 31 Jan 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

அரசு டவுன் பஸ்சில் பணியாற்றிய கண்டக்டர் வெளியூர் பஸ்சுக்கு மாற்றியதால் மனமுடைந்து விஷத்தை குடித்து விட்டார். இதனை கண்டித்து சக தொழிலாளர்கள் பணிமனை அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆம்பூர்,

ஆம்பூர் சவுராஷ்டிரபுரத்தை சேர்ந்த வெங்கடேசன். இவரது மகன் ராஜேஷ் (வயது 29), ஆம்பூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் டவுன் பஸ்சிலிருந்து வெளியூர் பஸ்சுக்கு இவரை பணிமனை நிர்வாகம் மாற்றியது. தொழிற்சங்கத்தினரும் இவரை மிரட்டியதாக கூறப்படுகிறது. தனக்கு மீண்டும் ஏற்கனவே பார்த்த பஸ்சில் பணியை ஒதுக்குமாறு ராஜேஷ் கேட்டுக்கொண்டார். ஆனால் அதனை அதிகாரிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது விஷத்தை குடித்து விட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாக்குவாதம்

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட சக தொழிலாளர்கள் பணிமனைக்கு சென்று கிளை மேலாளரிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story