புனேயில் பரிதாபம் ஏ.சி. பஸ் கதவு தானாக திறந்து விபத்து; 2 பேர் பலி


புனேயில் பரிதாபம் ஏ.சி. பஸ் கதவு தானாக திறந்து விபத்து; 2 பேர் பலி
x
தினத்தந்தி 31 Jan 2018 3:00 AM IST (Updated: 31 Jan 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

புனேயில், ஏ.சி. பஸ் கதவு தானாக திறந்து இடித்து தள்ளியதில், பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புனே,

புனேயில், ஏ.சி. பஸ் கதவு தானாக திறந்து இடித்து தள்ளியதில், பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கதவு இடித்து தள்ளியது

மும்பை- புனே பழைய நெடுஞ்சாலையில் சம்பவத்தன்று மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான ஏ.சி. பஸ் ஒன்று புனே ரெயில் நிலையம் அருகில் உள்ள பஸ் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்தது. காலியாக சென்ற அந்த பஸ், காட்கி பகுதியில் சென்றபோது, பஸ்சின் பக்கவாட்டில் உள்ள லக்கேஜ் தானியங்கி கதவு திடீரென திறந்தது.

அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நின்று கொண்டிருந்த 3 பேர் மீது அந்த கதவு வேகமாக இடித்து தள்ளியது. இதில், 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

2 பேர் பலி

இதில், துரதிருஷ்டவசமாக 2 பேர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போனது தெரியவந்தது. ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்களது பெயர் தீபக் சோர்டே(வயது55), ஜார்ஜ் ஆசீர்வாதன்(27) என்பது தெரியவந்தது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளவர் பெயர் ஆரோக்கியதாஸ் சுவாமி என்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் சந்தோஷ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story