சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் மர்ம பையால் பரபரப்பு
x
தினத்தந்தி 31 Jan 2018 4:00 AM IST (Updated: 31 Jan 2018 2:55 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம பையால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டதில் அதில் துணிகள் மட்டுமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாட்டு முனையம், வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே நேற்று கேட்பாரற்ற நிலையில் ஒரு பை கிடந்தது. அதனை பயணிகள் யாரும் எடுக்காததால் அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரவியது.

இதனால் விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் பீதி அடைந்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

இதுகுறித்து மத்திய தொழிற்படை பாதுகாப்பு போலீசார் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் தடுப்பு ஏற்படுத்தினர். பின்னர் அங்கிருந்த மர்ம பையை சோதனை செய்தனர்.

அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. பின்னர் பையை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் மட்டும் இருந்தன.

விமான நிலையத்திற்கு வந்த பயணி யாராவது பையை விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையம் நேற்று பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story