ரஜினி-கமல் ஆகியோரில் ஆதரவு யாருக்கு? திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பதில்


ரஜினி-கமல் ஆகியோரில் ஆதரவு யாருக்கு? திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பதில்
x
தினத்தந்தி 31 Jan 2018 3:08 AM IST (Updated: 31 Jan 2018 3:08 AM IST)
t-max-icont-min-icon

ரஜினி, கமல் ஆகியோரில் ஆதரவு யாருக்கு? என்பதற்கு இயக்குனர் பாரதிராஜா பதில் அளித்தார்.

புதுச்சேரி,

திரைப்பட இயக்குனர் பாரதிராஜா நேற்று புதுவை வந்தார். சட்டசபை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவர் சந்தித்து பேசினார்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த பாரதிராஜா நிருபர்களிடம் கூறும்போது, படப்பிடிப்புக்காக இடம் பார்க்க புதுச்சேரிக்கு வந்தேன். வந்த இடத்தில் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினேன் என்றார்.

அவரிடம் நிருபர்கள், கட்சி ஆரம்பிக்கும் ரஜினி, கமல் ஆகியோரில் யாருக்கு உங்கள் ஆதரவு? என்றும் வைரமுத்து பிரச்சினை குறித்தும் கேள்விகள் எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பாரதிராஜா கூறியதாவது:-

நாட்டில் கட்சி ஆரம்பிக்க அனைவருக்கும் உரிமை உள்ளது. ரஜினி, கமல் ஆகியோரின் கட்சி கொள்கை குறித்து அறிவித்ததும் அதைப்பார்த்து யாருக்கு ஆதரவு என்று நான் முடிவு செய்வேன். ஆனால் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. கடைசி வரை நான் சினிமா கலைஞனாகவே இருப்பேன்.

வைரமுத்து, ஜீயர் பிரச்சினைகள் இப்போது ஆறிவருகிறது. நான் ஏதேனும் கருத்து கூறி அதனால் இன்னொரு பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது. இவ்வாறு பாரதிராஜா கூறினார்.


Next Story