அம்பகரத்தூர் அரசு பள்ளியில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு


அம்பகரத்தூர் அரசு பள்ளியில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 31 Jan 2018 3:17 AM IST (Updated: 31 Jan 2018 3:17 AM IST)
t-max-icont-min-icon

அம்பகரத்தூர் அரசு பள்ளியில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு நடத்தினார். மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தை நடத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

காரைக்கால்,

காரைக்காலை சேர்ந்த அம்பகரத்தூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் அமைச்சர் கமலக்கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். வகுப்பறைகளுக்கு சென்று பார்வையிட்ட அமைச்சர், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தமாக உள்ளதா? மாணவர்களுக்கு போதிய வசதிகள் இருக்கிறதா? கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? குழாய்களில் தண்ணீர் வருகிறதா? என்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாதம் இருமுறை பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்த வேண்டும். அப்போதுதான் மாணவர்களின் கல்வித்தரம் மேம்படும் என்று ஆசிரியர்களிடம் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.


புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கழகம் மூலம் ரூ.85 லட்சம் மதிப்பில் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அம்பகரத்தூர் - கண்ணாப்பூர்பேட் ஓடக்காரத்தெரு சாலையை மேம்படுத்துதல், தேனூர் முதல் வள்ளலார் சாலை வரை குடிநீர் குழாய்களை விரிவுபடுத்துதல் மற்றும் திருநள்ளாறில் தட்சன் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளுக்கான பூமிபூஜை நடைபெற்றது.

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர் கமலக்கண்ணன் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஆதிதிராவிடர் நலத்துறை செயற்பொறியாளர் ஏகாம்பரம், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு, திருநள்ளாறு வட்டார காங்கிரஸ் தலைவர் அசோகானந்தன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Next Story