தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நாளை தொடங்குகிறது, அமைச்சர் கமலக்கண்ணன் தகவல்
புதுவை தாவரவியல் பூங்காவில் நாளை மலர் கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சியில் 9 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
புதுவை தாவரவியல் பூங்காவில் நாளை (வெள்ளிக் கிழமை) முதல் வருகிற 4-ந்தேதி வரை மலர், காய்கனி கண்காட்சி நடக்கிறது. இதற்காக கடந்த சில வாரங்களாக வெளி மாநிலங்களில் இருந்து விதவிதமான மலர்செடிகள், தாவரங்களை சேகரித்து வைத்து பராமரித்து வந்தனர். மேலும் இதுதொடர்பான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது.
தற்போது மலர் கண்காட்சிக்கான பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டன. இதனை அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வேளாண்துறை இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை அரசு சார்பில் வேளாண் விழா மற்றும் 32-வது மலர், காய் மற்றும் கனி கண்காட்சி நாளை தொடங்குகிறது. இதனை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைக்கிறார். இந்த கண்காட்சிக்காக உள்ளூர் மட்டுமின்றி புனே, ஓசூர், கொடைக்கானல் மற்றும் ஊட்டி போன்ற ஊர்களில் இருந்தும் பல்வேறு வகையான பூச்செடிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
இதுதவிர வேளாண்துறைக்கு சொந்தமான லாஸ்பேட்டை பசுமைக்குடிலில் உற்பத்தி செய்யப்பட்ட ஜெரேனியம் மலர் செடிகள் மற்றும் சிறப்பு மலர், காய்கறி மற்றும் கனி ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்படுகிறது.
மீன்வளம், கால்நடை மற்றும் கூட்டுறவு போன்ற அரசு துறைகள் சார்பிலும் அரங்குகள் இடம்பெறுகின்றன. தரமான மலர், கனிவகை செடிகள் மற்றும் அலங்கார செடிகளை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர் செடிகள் வளர்ப்போருக்காக தொட்டி வளர்ப்பு, மலர் அலங்காரம், காய்கறிகள், பழங்கள், மூலிகை தோட்டம், பழத்தோட்டம், வீட்டுத்தோட்டம் உள்பட 9 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
4-ந்தேதி நிறைவு விழா நடக்கிறது. ஆண்கள் பிரிவில் அதிக பரிசுகள் பெறும் நபருக்கு மலர் ராஜா என்ற பட்டமும், பெண்கள் பிரிவில் அதிக பரிசுகள் பெறும் நபருக்கு மலர் ராணி என்ற பட்டமும் வழங்கப்படும். முதல்-அமைச்சர் நாராயணசாமி பரிசுகளை வழங்குகிறார்.
மலர் கண்காட்சியில் நுழைவுக்கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.10 வசூலிக்கப்படும். இந்த கண்காட்சியை 3 லட்சம் பேர் கண்டுகளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

Related Tags :
Next Story