போலி நியமன ஆணை மூலம் தொழிலாளர்களை பணியில் சேர்த்த விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் கைது
போலி நியமன ஆணை மூலம் தொழிலாளர்களை பணியில் சேர்த்த விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் கைது செய்யப்பட்டார். மேலும் 5 பேர் சிக்கினர்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் சிலர் போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து ஊழியர்களின் பணிப்பதிவேடு, சான்றிதழ்கள் ஆகியவை சரியாக உள்ளதா? என்று அரசு போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
விசாரணையில் செஞ்சி தாலுகா நெகனூர்புதூர் கிராமத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (வயது 30), கண்டாச்சிபுரம் தாலுகா அடுக்கம் கிராமத்தை சேர்ந்த ஜெயபால் (32) ஆகியோர் வேலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் வேலையில் இருந்ததாகவும் அங்கிருந்து மாறுதலாகி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் போலி ஆவணங்களை கொடுத்து ரிசர்வ் கண்டக்டர்களாக பணியில் சேர்ந்து இருந்ததும், இதேபோல் செஞ்சி பொன்பத்தி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (31), கள்ளக்குறிச்சி பணிமனையில் போலி ஆவணங்களை கொடுத்து ரிசர்வ் கண்டக்டராக பணியில் சேர்ந்து இருந்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியதில் இவர்கள் 3 பேரிடம் இருந்தும் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் (நிர்வாகம்) குமார் (49) தலா ரூ.3½ லட்சம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி பணியில் சேர்த்ததும், இதற்கு குமாருக்கு உடந்தையாக தொழில்நுட்ப இளநிலை உதவியாளரான விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டை சேர்ந்த பிரகாசம் மகன் கார்த்திகேயன் (36), புதுச்சேரி பணிமனையில் கண்டக்டராக பணியாற்றி வரும் செஞ்சி பாடி பகுதியை சேர்ந்த ஆனந்த் (38) ஆகியோர் செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து துணை மேலாளர் குமார் துறை ரீதியாக பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார். மேலும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கார்த்திகேயன், ஆனந்த் ஆகிய இருவரின் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த மோசடி குறித்து அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் டைட்டஸ், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே அவர்கள் 6 பேரையும் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி துணை மேலாளர் குமார் மற்றும் போலி ஆவணங்களை கொடுத்து ரிசர்வ் கண்டக்டர்களாக பணியில் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், ஜெயபால், வெங்கடேசன் மற்றும் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட கார்த்திகேயன், ஆனந்த் ஆகிய 6 பேரையும் நேற்று முன்தினம் இரவு மடக்கிப்பிடித்தனர்.
6 பேர் மீதும் மோசடியாக ஆவணம் தயாரித்தல், மோசடியாக தயாரித்த ஆவணங்களை பயன்படுத்தி ஆதாயம் பெறுதல், மோசடி ஆவணம் என்று தெரிந்தே அதை உண்மையென அரசை நம்ப வைத்தல், நம்பிக்கை மோசடி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
அதன் பிறகு அவர்கள் 6 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் துணை மேலாளர் குமார், பணியில் இருந்த காலம் முதல் இதுவரை எத்தனை பேர் இடமாறுதலில் வந்துள்ளனர், அவர்களில் யார், யாரிடம் பணம் பெற்றுக்கொண்டு போலி நியமன ஆணைகள் மூலம் பணியில் சேர்த்துள்ளார் என்ற விவரங்களையும் போலீசார் சேகரித்து அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story